நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு.., கேரள வங்கியின் முக்கிய அறிவிப்பு.!
திருவனந்தபுரம் : வயநாட்டில் கடந்த ஜூலை 30 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மரணமடைந்தோர், உடமைகளை இழந்தோர், வீடுகளை இழந்தோரின் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது கேரள வங்கி. கேரள வங்கி சார்பில் நடத்தப்பட்ட நிர்வாகக் குழுக் கூட்டத்தில், இந்த முடிவை எடுத்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கேரள வங்கி முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் வழங்குவதாகவும், கேரள வங்கியின் வங்கி ஊழியர்களும் […]