ஜெயப்பிரதா, பார்த்திபன், நாசர், ரேவதி, அனுஹாசன், ரேகா, ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கேணி’. அரசு உயர் பதவியில் இருக்கிறார், ஜெயப்பிரதாவின் கணவர். அரசியல்வாதிகள் மோசடிக்கு உடன்படாத அவரை பொய் வழக்கில் கைது செய்கிறார்கள். ஜெயப்பிரதாவிடம் கிராமத்தில் உள்ள பூர்வீக வீட்டுக்கு போகும்படி சொல்லி விட்டு, சிறைக்குள்ளேயே கணவர் இறந்து போகிறார். அப்பாவி இளைஞர் ஒருவரை தீவிரவாதி என்று முத்திரை குத்தி சிறையில் தள்ளுகின்றனர். அந்த இளைஞரின் மனைவி பார்வதி நம்பியாரை அழைத்துக்கொண்டு கிராமத்துக்கு வருகிறார், ஜெயப்பிரதா. […]