மக்களுக்கு ஆக்சிஜன் வழங்க முடியாமல் தோல்வி அடைந்தவர் கெஜ்ரிவால். இவர் வீடுகளுக்கு ரேஷன் பொருள் வழங்குவது குறித்து பேசுவதாக மத்திய மந்திரி விமர்சனம். தலைநகர் டெல்லியில் தேர்தல் நடந்த பொழுது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று தொடர்ச்சியாக இரண்டு முறை ஆட்சி அமைத்தது. தேர்தல் நேரத்தில் மக்களுக்கு வீடு வீடாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்று […]
கொரோனா 3 வது அலையை சமாளிக்க டெல்லி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6000 சிலிண்டர்கள் இறக்குமதி. டெல்லியில் கொரோனா தொற்று கடந்த சில மாதங்களாக உச்சத்தை எட்டிவந்த நிலையில், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் டெல்லி அரசின் பல்வேறு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளினால் தற்போது அங்கு பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இன்று மட்டும் 1,550 ஆக புதிய கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது,207 பேர் உயிரிழந்துள்ளனர்.இது மார்ச் மாதத்திற்கு […]
முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 தினங்களாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு லேசான காய்ச்சல் , இருமல் இருந்ததை அடுத்து இன்று காலை அவருக்கு கொரோனா சோதனை செய்யப்படயுள்ளதாக நேற்று தகவல் வெளியானது. இந்நிலையில், இன்று காலை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது பரிசோதனை செய்த முடிவு வெளியானது.அதில், கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.