வருமான வரித்துறையினர் இன்று காலையிலிருந்து பல சினிமா தயாரிப்பாளர்களின் அலுவலங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான வீடு, அவர் தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். அதைப்போல சென்னை தி.நகரில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அலுவலகத்திலும் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதைப்போல, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு இல்லத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஞானவேல்ராஜா அலுவலகத்திலும் வருமான வரித்துறை வருமானவரித்துறை […]