புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சி துணைத் தலைவர் பதவியை திமுகவின் தமிழ்ச்செல்வன் ராஜினாமா செய்துள்ளார்.தனது ராஜினாமா கடிதத்தை தேர்தல் நடத்தும் அலுவலரும்,பேரூராட்சி செயல் அலுவலருமான செந்தில் குமாரிடம் அவர் அளித்துள்ளார். கீரமங்கலம் பேரூராட்சி துணைத் தலைவர் பதவி கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு(சிபிஐ) ஒதுக்கப்பட்ட நிலையில், முன்னதாக நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் சிபிஐ வேட்பாளர் முத்தமிழ் செல்வியை எதிர்த்து தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றார். இதனையடுத்து,கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் உடனே […]