தமிழின் தொன்மையை கண்டு சிலருக்கு வயிறு எரிவதால் அகழாய்வுகள் தேவையற்றது என எழுதிக்கிறார்கள் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தொழில்கள், தமிழ் ஆட்சி மொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கீழடி உள்ளிட்ட அகழாய்வில் தமிழின் தொன்மையை நிரூபிக்கும் வகையில் சான்றுகள் கிடைத்து வருகின்றன. 2 நாட்களுக்கு முன்பு கீழடியில் 146 செமீ பூமிக்கு அடியில் வெள்ளியிலான முத்திரை பதித்த காசு கிடைத்துள்ளது. […]
கீழடி 7-ஆம் கட்ட அகழாய்வு பணியை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தமிழக தொல்லியல்துறை சார்பில் கீழடியில் 6-ஆம் கட்ட அகழ்வாராட்சி பணி முடிவடைந்த நிலையில், இன்று 7-ஆம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியுள்ளது. இதனை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் பழனிசாமி காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். கீழடி, மணலூர், கொந்தகை, அகரம் ஆகிய நான்கு இடங்களில் 7-ஆம் கட்ட அகழாய்வு பணி நடக்கவுள்ளது என்பது […]
கீழடியில் 6 -ம் கட்ட அகழாய்வு பணிகள் செப்டம்பர் 15- ம் தேதிக்குள் முடிவுபெறவுள்ள நிலையில், பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகளை ஆய்வாளர்கள் தொடங்கியுள்ளனர். சிவகங்கை மாவட்டம், கீழடியில் 6- ம் கட்ட அகழாய்வு, 40 லட்ச ருபாய் செலவில் கடந்த பிப். 19- ம் தேதி தொடங்கியது. இந்த ஆறாம் கட்ட அகழாய்வு, தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் 24 குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு பணிகள் […]
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6ம் கட்ட அகழாய்வுப் பணி சமீபத்தில் தொடங்கியது. கீழடியைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட 4 இடங்களில் அகழாய்வு பணிகள் செய்யப்படுகிறது. கீழடியின் தொடர்ச்சியான அகழாய்வில் ஈமக்காட்டை அகழாய்வு செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 6ம் கட்ட அகழாய்வில் தற்போது வரை 8 தாழிகள், 5 பானைகள், 3 சுடுமண் குடுவைகள் உள்ளிட்ட 15,000 பொருட்கள் கிடைத்துள்ளன என்றும் அகழாய்வில் கிடைத்த பொருட்கள் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் அமைச்சர் […]
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று 6-ம் கட்ட அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைத்தார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் இதுவரை 5 கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றன. இதில் முதல் 3 கட்ட அகழாய்வை மத்திய தொல்லியல் துறையினரும், 4 மற்றும் 5 அகழாய்வு பணிகளை தமிழக தொல்லியல் துறையினர் நடத்தினர். இந்த நிலையில் சென்னை தலைமைச் […]
கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு, 3 வாரங்களில் நிறைவடையும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தமிழர் நாகரிகம் குறைந்தது 2600 ஆண்டுகள் பழமையானது என்பது கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வின் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டது.இந்த நிலையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இது குறித்து கூறுகையில்,கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு, 3 வாரங்களில் நிறைவடையும் . முதல் 3 கட்ட அகழாய்வு அறிக்கைகள் முதலமைச்சரின் அனுமதிபெற்று விரைவில் வெளியிடப்படும்.கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசின் நிதியாக ரூ.15 கோடி கோரியுள்ளோம் என்று […]