Excavation materials : தொல்லியல் துறையிடம் உள்ள கீழடியின் 5,765 அகழாய்வு பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய அரசு சார்பில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா என்பவர் இரண்டாம் கட்ட அகழாய்வு பணியை கடந்த 2013 முதல் 2016 வரை மேற்கொண்டார். அப்போது, அகழாய்வு பணியில் 5000க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த பொருட்கள் கிடைத்ததாக கூறப்பட்டது. Read More – ஓபிஎஸ்க்கு அதிகாரம் […]
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அதில் தமிழ்நாட்டில் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்டம் கீழடி, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை , திருவண்ணாமலை, தென்காசி, திருப்பூர், கடலூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ளப்படும். மேலும் தமிழ்நாடு மட்டுமின்றி தமிழ் சமூகத்தின் காலச்சுவடுகளை தேடி கேரளா, ஓடிஸா, ஆந்திரா […]
கீழடி அகழாய்வின் 5 கட்ட அறிக்கைகளை அரசு வெளியிடுவதில் தாமதம் ஏன்? என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் , தமிழர் நாகரிகத்தின் தொன்மையையும், பெருமையையும் உலகத்திற்கு உணர்த்தவிருக்கும் கீழடி அகழாய்வுப் பணிகள் விரைவாக நடைபெற்று வரும் போதிலும், அவற்றின் முடிவுகள் குறித்த அறிக்கைகளை வெளியிடுவதில் செய்யப்படும் தாமதம் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. இதுவரை 6 கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், ஒரு கட்ட அகழாய்வு […]
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் தற்போது நடைபெற்று வரும் கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. அதில் கீழடி,கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றது, இதில் கீழடியில் நடைபெற்ற அகழாய்வின் போது 6அடுக்கு உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இந்த ஒரு உறையானது முக்கால் அடி உயரமும் இரண்டு அறை அடி அகலமும் கொண்டு உள்ளது. இதில் மொத்தம் 6 உறைகள் கொண்ட அடுக்கு கிணறு கண்டு பிடிக்கபட்டு […]
இந்த 6- ம் கட்ட அகழாய்வில் 6 அடி நீளமுள்ள சுவர் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், கீழடியில் 5 ஆம் கட்ட அகழாய்வு நடந்து முடிந்த நிலையில், தற்பொழுது 6 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கியது. இந்த ஆறாம் கட்ட அகழாய்வு தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வு பணிகள், இம்மாதம் 15 -ம் தேதிக்குள் நிறைவுபெறுகிறது. இந்த 6- […]
கீழடியில் 6 -ம் கட்ட அகழாய்வு பணிகள் செப்டம்பர் 15- ம் தேதிக்குள் முடிவுபெறவுள்ள நிலையில், பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகளை ஆய்வாளர்கள் தொடங்கியுள்ளனர். சிவகங்கை மாவட்டம், கீழடியில் 6- ம் கட்ட அகழாய்வு, 40 லட்ச ருபாய் செலவில் கடந்த பிப். 19- ம் தேதி தொடங்கியது. இந்த ஆறாம் கட்ட அகழாய்வு, தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் 24 குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு பணிகள் […]
கீழடி ஆறாம் கட்ட அகழாய்வில் ஐந்து அடுக்கு கொண்ட உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடி அகழ்வாராய்ச்சி பணியானது கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி முதல் தற்போது வரை நடைபெற்று வருகிறது. ஐந்து கட்டமாக நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சி விரிவான முறையில் கீழடியில் மட்டுமல்லாமல் கீழடி சுற்றி இருக்கக் கூடிய கொந்தகை, அகரம், மணல் உள்ளிட்ட இடங்களிலும் நடைபெற்று வருகிறது. இந்த அகழ்வாராய்ச்சியில் பத்துக்கும் மேற்பட்ட […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் ஐந்து கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து முடிந்துள்ளது. தற்போது ஆறாவது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த பணியின் போது எலும்புக்கூடுகள், நாணயம் மணிகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. இந்நிலையில் பழந்தமிழரின் புகழை உலகறியச் செய்ய அங்கு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, கீழடியில் இன்று காலை 10 மணியளவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 12.25 […]
கீழடி, கொந்தகையில் நடந்து வரும் அகழாய்வில் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு. சிவகங்கை மாவட்டம், கீழடியில் 5 ஆம் கட்ட அகழாய்வு நடந்து முடிந்த நிலையில், தற்பொழுது 6 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கியது. இந்த ஆறாம் கட்ட அகழாய்வு கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. கொந்தகைகயில் நடந்து வரும் அகழாய்வில் இதுவரை 5 குழந்தையின் முழு உருவ எலும்புக்கூடுகள் கண்டு எடுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, முதுமக்கள் தாளிகளும் கண்டெடுக்கப்பட்டது. அங்கு தொடர்ந்து […]
ஊரடங்கு உத்தரவால் கீழடி 6-ம் கட்ட அகழ்வாய்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் இதுவரை 5 கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றன.பின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 6-ம் கட்ட அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைத்தார். இதில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் 6-வது கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் […]
கீழடியில் அருங்காட்சியகத்திற்கு நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் இதுவரை 5 கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றன. இதில் முதல் 3 கட்ட அகழாய்வை மத்திய தொல்லியல் துறையினரும், 4 மற்றும் 5 அகழாய்வு பணிகளை தமிழக தொல்லியல் துறையினர் நடத்தினர்.பின்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று 6-ம் கட்ட […]
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று 6-ம் கட்ட அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைத்தார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் இதுவரை 5 கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றன. இதில் முதல் 3 கட்ட அகழாய்வை மத்திய தொல்லியல் துறையினரும், 4 மற்றும் 5 அகழாய்வு பணிகளை தமிழக தொல்லியல் துறையினர் நடத்தினர். இந்த நிலையில் சென்னை தலைமைச் […]
ரூ12.21 கோடியில் கீழடி அகழாய்வு பொருட்களை கொண்டு உலக அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கீழடி ஆராய்ச்சியின் மூலம் தமிழர்களின் பண்பாடு மற்றும் பெருமையும் உலகளவில் பிரபலமாகி வருகிறது.இதனை தொடந்து அங்கு சுற்றுலாவிற்காக பல தரப்பினரும் வந்து சென்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு நாள் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், சிவகங்கை திருப்புவனம் அருகே உள்ள கொந்தகையில் ரூ12.21 கோடியில் கீழடி அகழாய்வு பொருட்களை கொண்டு உலக அருங்காட்சியகம் அமைக்கப்படும்.கீழடி அகழாய்வு தமிழர் […]
கீழடியில் உள்ள பொருட்கள் மதுரை உலக தமிழ் சங்க கட்டட வளாகத்தில் கண்காட்சிக்காக தற்காலிகமாக வைக்கப்படும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். கீழடி ஆராய்ச்சியின் மூலம் தமிழர்களின் பண்பாடு மற்றும் பெருமையும் உலகளவில் பிரபலமாகி வருகிறது.இதனை தொடந்து அங்கு சுற்றுலாவிற்காக பல தரப்பினரும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கீழடி குறித்து கூறுகையில்,கீழடியில் கண்டெடுக்கப்பட்ட 750 தொல் பொருட்கள், மதுரை உலக தமிழ் சங்க கட்டட வளாகத்தில் கண்காட்சிக்காக தற்காலிகமாக வைக்கப்படும். […]
கீழடியை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். கீழடி ஆராய்ச்சியின் மூலம் தமிழர்களின் பண்பாடு மற்றும் பெருமையும் உலகளவில் பிரபலமாகி வருகிறது.இதனை தொடந்து அங்கு சுற்றுலாவிற்காக பல தரப்பினரும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கீழடியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆய்வு செய்தார்.இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,கீழடியை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் பிரதேசமாக அறிவிக்க வேண்டும். அகழாய்வு பணிகளை 110 ஏக்கருக்கு விரிவுப்படுத்த வேண்டும் என்று வைகோ பேட்டி அளித்தார்.
கீழடி தொடர்பாக மதுரையில் கண்காட்சி அமைக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை மதுரையில் கண்காட்சியாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். கீழடி அகழாய்வினை காணவரும் பார்வையாளர்கள் வரும் 13ம் தேதி வரை அனுமதிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
கீழடியில் விடுமுறை நாட்களில் பார்வையாளர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சிவகங்கை ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார். சிவகங்கை ஆட்சியர் ஜெயகாந்தன் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,கீழடியில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் . 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சிக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கும் . விடுமுறை நாட்களில் பார்வையாளர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.
கொடைக்கானலில் உள்ள கற்திட்டைகள் குறித்து தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். கொடைக்கானலில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், கொடைக்கானலில் உள்ள பேத்துப்பாறை மற்றும் அடுக்கம் கிராமங்களில் உள்ள கற்திட்டைகள் குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.கீழடியின் பெருமையை பிரதமர் மோடி உலகிற்கு எடுத்துச் செல்வார் என நம்புகிறேன் என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் இருந்து தொடங்கப்பட வேண்டும் என்பதை கீழடி மண் உறுதி செய்திருக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழர் நாகரிகம் குறைந்தது 2600 ஆண்டுகள் பழமையானது என்பது கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வின் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கீழடியில் ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்து தொடங்கப்பட வேண்டும் என்று பல அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்,அது தமிழ்நாட்டில் இருந்து தொடங்கப்பட வேண்டும் […]
கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு 2 வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார் கீழடியில் 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சியின் இறுதி கட்ட பணிகளை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆய்வு செய்தார்.இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுதுஅவர் கூறுகையில், கீழடி அகழாய்வை சிலர் அரசியலாக்க பார்க்கின்றனர். தொல்லியல் ஆய்வின் போது, இந்தியாவின் பல இடங்களில் ஒற்றுமை தெரிகிறது. 11 விதமான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கீழடியில் ஆய்வுகள் நடத்தப்படுகிறது. 5-ம் கட்ட அகழாய்வு 2 வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் […]