இரண்டாவது நாளாக கோவை கேசிபி நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று காலை முதல் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அலுவலகங்கள், அவருக்கு நெருக்கமான சிலருக்கு சொந்தமான இடங்கள் என 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடியாக சோதனை நடத்தினர். இந்நிலையில் கோவை பீளமேட்டில் உள்ள கேசிபி நிறுவனத்திலும் நேற்று சோதனை நடத்தப்பட்டது. நேற்று காலை தொடங்கிய சோதனை நள்ளிரவு வரை நடைபெற்ற நிலையில், […]