பொதுப்பிரிவினரின் மக்கள் தொகையினை கணக்கீடு செய்ய ஆணையம் அமைத்து பரிந்துரை பெற்று முடிவெடுக்க வேண்டுமென சிபிஐ(எம்) கோரிக்கை. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு வழங்கிய 10% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்திருந்தது. இதற்கு, திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாஜக, காங்கிரஸ் வரவேற்பு அளித்துள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்ட போது அத்திருத்தத்தை அப்போதே சிபிஎம் ஆதரித்தது என சிபிஎம் […]