கஜகஸ்தான்: நாட்டில் ஏர்லைன்ஸின் பாகு-க்ரோஸ்னி விமானம் மேற்கு கஜகஸ்தானின் அக்டாவ் அருகே அவசரமாக தரையிறக்க முயற்சி செய்தபோது தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 72 பயணிகளுடன் சென்ற விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக முதற்கட்டமாக தகவல்கள் வெளியானது. விபத்து சம்பவத்தை தொடர்ந்து, உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு இதனை பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இப்பொது, மீட்பு […]
கஜகஸ்தான்: கஜகஸ்தானில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அஜர்பைஜான் ஏர்லைன்ஸூக்கு சொந்தமான அந்த விமானம், ரஷ்யாவின் செச்சினியாவில் உள்ள பாகுவிலிருந்து க்ரோஸ்னிக்கு சென்று கொண்டிருந்தது. க்ரோஸ்னியில் நிலவி வரும் பனிமூட்டம் காரணமாக 3 இடங்களில் தரையிறங்க முடியாமல் விமானம் திருப்பிவிடப்பட்ட நிலையில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 72 பேருடன் சென்றகொண்டிருந்த அஜர்பைஜான் ஏர்லைன்ஸின் Embraer E190AR என்கிற விமானம் கஜகஸ்தானின் அக்டோவில் தரையிறங்கும் போது, வெடித்துச் […]
கஜகஸ்தானின் கரகாண்டா பகுதியில் உள்ள ஒரு சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எஃகு நிறுவனமான ஆர்சிலர் மிட்டலுக்குச் சொந்தமான சுரங்கத்தில் இன்று (சனிக்கிழமை) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தானது இன்று காலை ஏற்பட்டதாகவும், இதனையடுத்து அந்த சுரங்கத்தில் வேலை செய்து வந்த 252 பேரில், 208 பேர் வெளியேற்றப்பட்டனர். ஆனால், தீ விபத்தில் சிக்கி 21 பேர் கருகி உயிரிழந்துவிட்டதாகவும், அவர்களது உடல்கள் […]
கஜகஸ்தான் நாட்டில் உள்ள இராணுவ தள ஆயுதக்கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது, இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். கஜகஸ்தான் நாட்டின் ஜம்லி மாகாணம் பைசக் மாவட்டத்தில் ராணுவ தளம் அமைந்துள்ளது. இந்த ராணுவ தளத்தில் உள்ள ஆயுத கிடங்கில் வெடி பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று திடீரென இந்த ராணுவ தளத்தில் சத்தத்துடன் கூடிய வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தால் ராணுவ தளம் முழுவதிலும் தீ பரவியுள்ளது. இந்த தீ பிற பகுதிகளுக்கும் வேகமாக […]
ஒலிம்பிக் மல்யுத்தம் அரையிறுதிப் போட்டியின்போது இந்தியாவின் ரவிக் குமாரை,கஜகஸ்தான் வீரர் கடித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற ஆண்கள் மல்யுத்தம் காலிறுதிப் போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவிக் குமார் தஹியா ,பல்கேரியாவின் வாலண்டினோ வாங்கேலோவை 14-4 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். அதனைத் தொடர்து நடைபெற்ற 57 கிலோ ஃப்ரீஸ்டைல் அரையிறுதியில் இந்தியாவின் ரவி குமார் தஹியா,கஜகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சனாயேவை எதிர்கொண்டார்.இப்போட்டியின்போது,ரவி கடைசி நிமிடங்களில் கஜகஸ்தான் வீரரை தரையில் சாய்த்தார்,இதனால்,அவரது […]
கஜகஸ்தான் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு 7.5 லட்சம் சுவாச கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. தினமும் லட்சக் கணக்கானோர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவதால் பல்வேறு மாநில அரசுகளும் மருத்துவமனைகளில் போதிய அத்தியாவசிய தேவைகளின்றி திணறி வருகிறது. மேலும் இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை தான் தலைவிரித்து ஆடுகிறது. இருப்பினும் பல நாடுகள் இந்தியாவுக்கு தேவையான வென்டிலேட்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், மருந்துகள் மற்றும் […]
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 196 நாட்களுக்கு பின் கிறிஸ் கேசிடி மற்றும் அவரின் குழுவினர், பூமிக்கு திரும்பினார்கள். நாசாவில் பணிபுரியும் கிறிஸ் கேசிடி மற்றும் அவரின் குழு, கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி விண்வெளிக்கு சென்று, சர்வதேச விண்வெளி நிலையத்தில் எஸ்படிஷன் 63 எனும் பிரிவில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் விண்வெளியில் இருக்கையில் ஏற்பட்ட சூரிய கிரகணத்தின்போது அங்கிருந்து பூமியை எடுக்கப்பட்ட படங்களைப் பகிர்ந்திருந்தார். அது இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டுள்ளது. Touchdown!!! […]
கஜகஸ்தானில் புதிய வைரஸ் பரவி வருவதாக சீன ஊடகங்கள் தெரிவித்து வரும் தகவலை கஜகஸ்தான் நாட்டு அரசு மருத்துவருகிறது. கஜகஸ்தானின் உள்ள சீன தூதரகம் அண்மையில் ஒரு தகவலை வெளியிட்டது. அதன்படி, உலகமே தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் பற்றியும் அதன் தடுப்பு நடவடிக்கை குறித்தும் ஆராய்ந்து வருகிறது. ஆனால், கஜகஸ்தானில் புதிய வைரஸ்(நிமோனியா – Pneumonia virus) பரவி வருவதாக தனியார் உள்ளூர் செய்தி சேனல்கள் கூறிவருவதாக தகவலை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த புதிய வைரஸானது, […]
கஜகஸ்தானின் உள்ள அல்மாட்டி விமான நிலையத்தில் இருந்து 95 பயணிகள் மற்றும் ஐந்து பணியாளர்களுடன் பெக் ஏர் ஜெட் விமானம் நூர்-சுல்தானுக்குச் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அருகில் இருந்த 2 மாடி கட்டடத்தின் மீது மோதி விபத்தில் சிக்கியது. இந்த விமான விபத்தில் இதுவரை 7 பேர் இறந்ததாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருவதாக விமான நிலையம் தெரிவித்துள்ளது.
கஜகஸ்தான் நாட்டிலுள்ள பாஸ்தொப் பகுதியை சேர்ந்தவர் அலுவா அப்லஸ்பெண். 14 வயதாகும் இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது சோனை தலையணைக்கு அருகில் சார்ஜ் போட்டுவிட்டு, ஹெட்போனில் பாட்டு கேட்டுள்ளார். தலையணையில் இருந்த அந்த போன் திடீரென சூடாகி வெடித்தது. இதனால் தலையணையில் தீப்பிடித்து, அந்த சிறுமியின் உடல் முழுவதும் பரவி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உன்னை கண்ட அவர்களின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து, கதறினர். இதனையடுத்து காவல்துறையில் […]
கஜகஸ்தான் நாட்டின் காரகண்டா மாகாணத்தில் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.இவர்கள் அப்பகுதியில் ஒரு கல்லறையை தோண்டினர்.அதில் இரண்டு எலும்பு கூடுகள் இருந்தது. அந்த இரண்டு எலும்பு கூடுகளும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு புதைக்கப்பட்டு இருந்ததை பார்த்த ஆராய்ச்சியாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.இரண்டு எலும்பு கூடுகளுக்கு அருகில் ஏராளமான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இருந்தது.மேலும் ஒரு எலும்பு கூடு அருகில் வளையல்கள் தங்க மோதிரங்கள் இருந்தது. நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் இறந்த 16,17 வயது உடையவர்களின் […]