கயத்தாறு அருகே குடும்ப தகராறில் விவசாயி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கயத்தாறு அருகே வடக்கு கூட்டு பண்ணை சேர்ந்தவர் ராமமூர்த்தி 60 வயதான இவர் விவசாயி , இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவியும் 3 மகள்களும் 1மகனும் உள்ளனர், இந்நிலையில் ராமமூர்த்தி தினமும் குடித்து விட்டு வந்து மனைவி கிருஷ்ணவேணி உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போடுவார், அதைபோல் நேற்று முன்தினம் மாலை குடித்து விட்டு வந்து வாக்குவாதம் செய்துள்ளார். […]