ஆட்சியர் கவிதா ராமுவை பாராட்டி திருமாவளவன் ட்வீட். புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதிய ரீதியிலான குற்றங்கள் எந்த வடிவில் இருந்தாலும் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கலாம் என வாட்சப் எண்ணை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அவர்கள் வெளியிட்டுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எளியவர்களை அடக்கி ஒடுக்கி அமைதியை நிலைநாட்டி சட்டம்- ஒழுங்கைப் பாதுகாப்பது தான் வழக்கமான நடைமுறை. அது […]