காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 5,429 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் நேற்று முன்தினம், விநாடிக்கு 5,060 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 5,429 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டுர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து வருவதால், மேட்டூர் அணை நீர்மட்டம் உயர தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம், 35.84 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 36.72 அடியாக உயர்ந்துள்ளது.
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் சுசீந்திரம் தபால் நிலையம் முன்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத மத்திய அரசை கண்டித்தும், அதற்கு உரிய அழுத்தம் கொடுக்காத மாநில அரசை கண்டித்தும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் தாமரைபாரதி தலைமை வகித்தார். திமுக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.அவர் கூறியதாவது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க […]