மறைந்த எம்.எல்.ஏ காத்தவராயன் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். வேலூர் குடியாத்தம் தொகுதி திமுக எம்எல்ஏ காத்தவராயன் உடல்நலக்குறைவால் காலமானார். இவர் கடந்த ஆண்டு மே மாதம் தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வானார். இந்நிலையில் இன்று பேர்ணாம்பட்டில் மறைந்த குடியாத்தம் எம்.எல்.ஏ காத்தவராயன் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.