திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் உள்ள விஸ்வநாதர் உலகம்மன் கோயிலில் மாசி திருவிழாவானது தற்போது நடைபெற்று வருகிறது. இக்கோவில் திருவிழாவில் நேற்று நடந்த வானவேடிக்கையிலிருந்து வந்த தீப்பொறி ஒன்று கோயில் வளாகத்தில் பைரவர் சன்னதியின் பின்புறம் உள்ள மரம் ஒன்றில் விழுந்தது. உடனே அந்த மரம் தீப்பிடித்து எரிந்தது. இதனை கேட்டு தகவல் அறிந்த தீயணைப்பு படையினர்,தீயணைப்பு படை அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் அங்கு விரைந்து வந்தனர்.பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் […]