உலகப் புகழ்பெற்ற காஷ்மீர் குங்குமப்பூ இப்போது புவிசார் குறியீடு பெற்றுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் உற்பத்தி செய்யப்படும் குங்குமப்பூவிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. உலகில் காஷ்மீரில் மட்டுமே 1,600 மீட்டர் உயரத்தில் குங்குமப்பூ வளர்க்கப்படுகிறது. நடப்பு பருவத்தில் உற்பத்தி அதிக அளவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மத்திய அரசு சுமார் ரூ.411 கோடி ஒதுக்கி உள்ளது. இதன் மூலம் சுமார் 3,700 ஏக்கருக்கும் மேலாக பரப்பளவு அதிகரிக்கப்படுகிறது. குங்குமப்பூ மையமாகத் திகழும் பம்போா் பகுதியில் இந்தப் பருவத்தில் […]