Tag: Kashmir Police

ஜம்மு காஷ்மீரில் கணவன் – மனைவி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு.!

சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் தம்பதியினர் படுகாயமடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜெய்ப்பூரை சேர்ந்த ஃபர்ஹா மற்றும் தப்ரேஸ் ஆகியோர் பயங்கரவாதிகளால் அனந்த்நாக் பகுதியில் தாக்கப்பட்டதாக காஷ்மீர் மண்டல காவல்துறையினர் இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளனர். தற்போது அந்த பகுதி பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

#TerroristsAttack 2 Min Read
Jammu Kashmir