ஜம்மு-காஷ்மீர் எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதால், அதற்க்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. சமீப காலமாக போர் நிறுத்த ஒப்பந்தக்களை மீறி எல்லையில் ராணுவ நிலைகள் மற்றும் கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் தாக்குதல் நடத்துவது அதிகமடைந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தரப்பில் உரிய பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், காஷ்மீர் எல்லைக்கு அருகே உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் மன்கோட் பிரிவில் இன்று காலையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி […]
காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதிலிருந்து காஷ்மீர் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. காரணம், காஷ்மீர் யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டது பாகிஸ்தானுக்கு பிடிக்கவில்லை. இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தற்போது, காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி இருப்பதாக, காஷ்மீர் ஆளுநர் தகவல் அளித்துள்ளார். மேலும், எல்லை தாண்டிய தாக்குதலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.