கரூரில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பாக மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தல். டெல்லியில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்திய சிந்தியாவை, தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து இன்று ஆலோசனை மேற்கொண்டார். சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பது தொடர்பான இடத்தை இறுதி செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த ஆலோனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் விரிவாக்கம் செய்யும் […]
கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையில் ரூ.3 கோடி ஊழல் என எழுந்த புகாரில் 4 பேர் பணியிடை நீக்கம். கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையில் ரூ.3 கோடி ஊழல் என எழுந்த புகாரில் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நெஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சத்யபாமா, உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் பூபாலன் சிங், கரூர் கோட்டை கணக்கர் பெரியசாமி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சாலை போடாமல் போடப்பட்டதாக கூறி அதிகாரிகள் துணையுடன் பணத்தை முறைகேடு செய்ததாக […]
தமிழநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து ட்விட்டரில் அவதூறாக பதிவிட்டதாக கூறி கரூர் பாஜக பிரமுகர் விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். திமுக தகவல் தொழில்நுட்ப அணி புகாரின் பேரில் முனியப்பனூர் வீட்டில் விக்னேஷை போலீசார் கைது செய்தனர்.
கரூர் வியாபாரிகளிடம் தினசரி சுங்க வசூல் ரத்து என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு. சுங்க வசூல் ரத்து: கரூரில் 2000க்கும் மேற்பட்ட தரைக்கடை வியாபாரிகளிடம் வசூலிக்கப்பட்டு வந்த தினசரி சுங்க வசூல் ரத்து செய்யப்பட்டது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவை அடுத்து, தினசரி சுங்க வசூல் ரத்து செய்யப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். கரூரில் தரைக்கடை வியாபாரிகளிடம் ஒப்பந்ததாரர்கள் டெண்டர் எடுத்து சங்க வசூல் செய்து வந்தனர். தேர்தல் வாக்குறுதி: வியாபாரிகளுக்கு சங்க வசூல் […]
கரூரில் நெடுஞ்சாலை பகுதிகளில் அதிவேகமாக செல்லும் வாகனங்களை ‘தானியங்கி வேகமாணி கருவி’ மூலம் கண்டறிந்து அவர்களுக்கு கரூர் போக்குவரத்துக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். கரூர் மாவட்டம், மண்மங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலை இருக்கிறது. அந்த குறிப்பிட்ட பகுதியில் 40 கிலோமீட்டர் வேகத்திற்கு அதிகமாக செல்ல கூடாது என்கிற கட்டுப்பாடு இருக்கிறது. அந்த குறிப்பிட்ட வேகத்தை மீறி அதி வேகத்தில் செல்லக்கூடிய வாகனங்களை கண்டறிய புதியதாக “தானியங்கி வேகமானி” எனும் […]
திமுகவில் சேரவில்லையென்றால் அதிமுக நிர்வாகிகள் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத அளவுக்கு பொய் வழக்குகள் போடுவதாக கூறி, ஓபிஎஸ்,ஈபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளனர். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் திமுக-வில் சேரவில்லை என்றால், அவர்கள் மீது ஜாமீனில் வெளியில் வர முடியாத பிரிவுகளில் பொய் வழக்குகள் தொடுக்கப்பட்டு வருவதாகவும்,அரசியல் ரீதியாக அதிமுகவை சந்திக்க முடியாத திராணியற்ற திமுக-வை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் […]
தமிழகம்:பாலியல் கொடுமைக்கு நீதிகேட்டு காவல்நிலையம் போனால் இதுதான் நடக்கும் என்றால்,உயிரிழந்த கரூர் மாணவியின் குடும்பம் என்னபாடு பட்டிருக்கும்? என்று எம்பி ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார். கரூரில் பாலியல் கொடுமையால் கடந்த 19 ஆம் தேதி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.இது தொடர்பாக,காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற உயிரிழந்த மாணவியின் தாயார்,உறவினர்களிடம் கொடூரமாக நடந்து கொண்டதாக காவல் ஆய்வாளர் கண்ணதாசன் நேற்று இரவு தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில்,தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆய்வாளர் கண்ணதாசன், […]
பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டதாக கருதப்படும் பெண் குழந்தைகள் ‘1098’ என்ற இலவச அவசர தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். சமீபத்தில் கரூர் மாவட்டம், வெண்ணெய் மலையில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது பள்ளி மாணவி பள்ளி முடிந்து வீடு திரும்பிய நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து வந்த, போலீசார் மாணவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். […]
கரூர் மாவட்டத்தில் 4 தொகுதியையும் திமுகவினர் கைப்பற்றினர். தமிழகத்தில் ஏப்-6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைப்பெற்ற நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன்படி திராவிட முன்னேற்ற கழகம் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி வெற்றி கனியை பறித்துள்ளது. இந்நிலையில், கரூர் தொகுதியில் செந்தில் பாலாஜி, அரவக்குறிச்சி தொகுதியில் இளங்கோ, கிருஷ்ணராயபுரம் தொகுதியில் சிவகாமசுந்தரி, குளித்தலை தொகுதியில் மாணிக்கம் ஆகியோர் தி.மு.க சார்பில் போட்டியிட்டனர். இதனையடுத்து, இந்த 4 தொகுதிகளிலும் திமுகவினர் […]
கரூர் சங்கமும் அறக்கட்டளைக்கு சிறுமி கன்யா தனது ஒரு வருட உண்டியல் சேமிப்பு பணமான 2,040 ரூபாயை நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சங்கமம் அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனம் ஆதரவற்றவர்கள் மற்றும் பின்தங்கிய நிலையில் உள்ள ஏழைகளுக்கு உதவி செய்யும் நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட அமைப்பாகும். இந்த அறக்கட்டளையினர் கடந்த சில மாதங்களாக கரூரில் சாலை ஓரங்களில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு தினமும் மூன்று வேளை உணவு வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று […]
கொரோனா பாதிப்பிலிருந்து கரூர் மீண்ட நிலையில் இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தமிழகத்தில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. அதே நேரத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்று தமிழகத்தில் 161 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதனால், மொத்த பாதிப்பு 2323 ஆக உயந்தது. தமிழகத்தில்,கொரோனா பாதிப்பே ஏற்படாத மாவட்டமாக கிருஷ்ணகிரி உள்ளது. சமீபத்தில் ஈரோடு, நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்தனர். கொரோனாவால் கரூரில் 42 பேர் […]
கரூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று சிகிச்சையிலிருந்து பூரண குணமடைந்த கடைசி நபரை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழியனுப்பி வைத்தார். கொரோனா தொற்று காரணமாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரூர், நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள் கொரோனா சிகிச்சை பெற்று வந்தனர். கரூர் மாவட்டத்தை சேர்ந்த 42 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஏற்கனவே […]
கரூரில் 3ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கரூரை சேர்ந்த சிவசாமி என்பவர் ஷோபிகா இம்பெக்ஸ் கொசுவலை நிறுவனத்தை நடத்திவருகிறார். வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து வருமான வரித்துறையினர் சிவசாமி வீட்டில் நேற்று முன்தினம் முதல் சோதனை மேற்கொண்டனர்.2-வது நாளாக நடைபெற்ற சோதனையில் பீரோவில் இருந்து கட்டுக்கட்டாக ரூ..32 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று மூன்றாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் தொழிலதிபர் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக ரூ.32 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கரூரை சேர்ந்த சிவசாமி என்பவர் ஷோபிகா இம்பெக்ஸ் கொசுவலை நிறுவனத்தை நடத்திவருகிறார்.இந்தநிலையில் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து வருமான வரித்துறையினர் சிவசாமி வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.இந்த சோதனையில் பீரோவில் இருந்து கட்டுக்கட்டாக ரூ..32 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இந்த பணத்தை பணம் பறிமுதல் செய்தனர்.
கர்நாடகாவில் பெருமழை பெய்து வருவதன் காரணமாக, காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நீர்மட்டம் வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியில் இருந்து 76 ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் தற்போது மேட்டூர் அணையின் முழுகொள்ளளவான 120 அடியை தற்போது எட்டியுள்ளது. இதன்காரணமாக 35,500 கன அடி நீர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சேலம், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் காவிரி […]
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குளங்களை ஆக்கிரமித்ததாக எழுந்த புகாரின் பேரில் குளத்தின் ஆக்கிரப்பு பகுதிகள் அதிகாரிகளால் அகற்றப்பட்டது. இந்த குளம் ஆக்கிரமிப்பில் காட்டி கொடுத்ததாக கூறி, தந்தை வீரமலை, மற்றும் அவரது மகனான நல்ல தம்பியும் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக 6 பேர் சரணடைந்துள்ளனர். இந்த வழக்கில் சரியாக விசாரணை நடைபெறவில்லை என கூறி, ஆய்வாளர் பாஸ்கரனை சஸ்பெண்ட் செய்து டிஐஜி பாலகிருஷ்ணன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
கரூர் மாவட்ட புதிய எஸ்.பி.யாக விக்கிரமனை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. அதேபோல் அடுத்த மாதம் 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது தற்போது கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் மே 19ல் இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கரூர் மாவட்ட புதிய எஸ்.பி.யாக விக்கிரமனை நியமித்து தமிழக அரசு உத்தரவு […]
கரூர் அமராவதி ஆற்றுப்படுகையில் தூர்வாரும் பணியில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 13 பேரை கைது செய்த காவல்துறை 13 பேரின் மீது வழக்கு பதிவு செய்தது இந்நிலையில் கைது செயப்பட்ட நாம் தமிழர் கட்சியினர் 13 பேரை நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டபோது அவர்களை சிறைப்படுத்த எந்த அவசியம் இல்லை என கூறிய நீதிபதி கைது செய்யப்பட்ட 13 பேரையும் விடுதலை செய்தார். DINASUVADU
கரூரை அருகே உள்ள காந்திகிராமம் பகுதியில் உள்ள தனியார் நகைகடையில் மர்ம நபர்கள் 10 கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்றனர். கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிரகதீஸ் என்ற தனியார் நகை கடை உள்ளது. இந்த கடையில் மர்ம நபர்கள் சிலர் நேற்றிரவு நுழைந்து, கடையில் இருந்த சுமார் 10 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தேசமயம் தங்க பொருட்கள் பாதுகாப்பான இரும்பு அறையில் வைத்ததால், அப்பொருட்கள் கொள்ளை போகாமல் தப்பித்துள்ளது. இதனையடுத்து, […]
பேருந்து கட்டண உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்கள் பின்நோக்கி நடந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். கரூர் மாவட்டம் குளித்தலை பஸ்நிலையம் முன்பு பேருந்து கட்டண உயர்வை ரத்துசெய்ய கோரியும், தமிழக அரசை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்கள் பின்நோக்கி நகர்ந்து செல்லும் போராட்டம் செய்தனர். இதில் 30க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவரை குளித்தலை காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டு தனியார் திருமணமகாலில் தங்கவைத்துள்ளனர். https://www.facebook.com/100011243927225/videos/543527182698741/ https://www.facebook.com/100011243927225/videos/543527182698741/