அதிக விபத்து ஏற்படும் புலியூர், உப்பிடமங்கலம் சாலையில் உள்ள லிங்கத்தூர் வளைவில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபஸ்கர் ஆய்வு மேற்கொண்டார். கரூர் அடுத்த உப்பிடமங்கலம் மேல்பாகம் லிங்கத்தூர் அழகு மலை சுவாமி கோயில் அருகே சாலை வளைவில் அதிக விபத்துக்கள் ஏற்பட்டு, உயிரிழப்புகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க வலியுறுத்தி உப்பிடமங்கலம் பகுதி பொதுமக்கள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கரிடம் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நெடுஞ்சாலை துறை பொறியாளர்களுடன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற […]
குளித்தலையில், பல்வேறு திட்டங்களின் மூலம் கட்டப்பட்ட வீடுகள் பழுதடைந்ததால் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான உத்தரவை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார். கரூர் மாவட்டம் குளித்தலை பகுதிகளில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு திட்டங்களின் மூலம் கட்டப்பட்ட வீடுகள் பழுதடைந்தது. அரசுக்கு பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதன் மூலம் பழுதடைந்த வீடுகளை பராமரிக்கும் பணிகளை மேற்கொள்வதற்கான உத்தரவுகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பயனாளிகளுக்கு வழங்கினார். முழு […]
மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரையை ஊர் உள்ளே செல்லவிடாமல் மக்கள் முற்றுகையை செய்தனர். கரூர்: கரூர் மாவட்டத்தில் கடந்த 7ம் தேதி கவர்னர் பன்வாரிலால் புரோகித் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது கரூர் அடுத்த வீரணம்பாளையம் என்ற இடத்தில் துவக்க பள்ளியை பார்வையிட்டார். பின்னர் அதன் அருகில் உள்ள வாரிவாய்க்காலில் கட்டப்பட்ட தடுப்பணையை திறந்து வைத்தார். தடுப்பணையை கவர்னர் திறந்து வைத்தபோது, அதன் அருகில் இருந்த மின்கம்பத்திலிருந்து துவக்க பள்ளிக்கு மின் சப்ளை செய்யப்பட்டு, குடிநீர் விநியோகிக்கப்பட்டு இருந்தது. கவர்னர் […]
கரூரை அருகே உள்ள காந்திகிராமம் பகுதியில் உள்ள தனியார் நகைகடையில் மர்ம நபர்கள் 10 கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்றனர். கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிரகதீஸ் என்ற தனியார் நகை கடை உள்ளது. இந்த கடையில் மர்ம நபர்கள் சிலர் நேற்றிரவு நுழைந்து, கடையில் இருந்த சுமார் 10 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தேசமயம் தங்க பொருட்கள் பாதுகாப்பான இரும்பு அறையில் வைத்ததால், அப்பொருட்கள் கொள்ளை போகாமல் தப்பித்துள்ளது. இதனையடுத்து, […]
பேருந்து கட்டண உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்கள் பின்நோக்கி நடந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். கரூர் மாவட்டம் குளித்தலை பஸ்நிலையம் முன்பு பேருந்து கட்டண உயர்வை ரத்துசெய்ய கோரியும், தமிழக அரசை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்கள் பின்நோக்கி நகர்ந்து செல்லும் போராட்டம் செய்தனர். இதில் 30க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவரை குளித்தலை காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டு தனியார் திருமணமகாலில் தங்கவைத்துள்ளனர். https://www.facebook.com/100011243927225/videos/543527182698741/ https://www.facebook.com/100011243927225/videos/543527182698741/