மதுரை : மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தாண்டு புத்தக கண்காட்சியானது நேற்று தொடங்கியது. மதுரை தமுக்கம் மைதானத்தில் மாநாட்டு மையத்தில் நேற்று அமைச்சர் மூர்த்தி இந்த புத்தக கண்காட்சியை தொடங்கிவைத்தார். அமைச்சர் புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்து சென்ற பிறகு, கிராமப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மதுரை அரசு இசைக்கல்லூரி சார்பில் கிராமப்புற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த சமயத்தில் “அங்கே இடி முழங்குது” என்ற கருப்பசாமி பாடல் பாடப்பட்டது. […]