இனி நடிகர்கள் முதல்வராக முடியாது , விவசாயிகள் தான் முதல்வர்கள் ஆக முடியும் என கருப்பண்ணன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் நாற்பத்தி ஒன்பதாவது ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் துவக்க விழாவும் மாற்றுக் கட்சியினர் கழகத்தில் இணையும் விழாவும் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட ஈரோடு மாவட்டத்தின் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், தமிழகத்தின் சுற்றுச்சூழல் துறை அமைச்சருமாகிய கருப்பண்ணன் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கொடியை ஏற்றிய பிறகு மேடையில் மக்களுக்கு உரையாற்றினார். […]