திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததை அடுத்து அவரது உடலுக்கு இரங்கல் தெரிவிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் தமிழரசன் ஆகியோர் கோபாலபுரம் வந்தனர்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
சி பி எம் அகில இந்திய பொது செயலாளர் திரு சீத்தாராம் யெச்சூரி அவர்கள் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் கலைஞர் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய உத்தரவிடும் படி வலியுறுத்தி உள்ளார்.
காவேரி மருத்துவமனையில் இருந்து பல ஆயிரம் தொண்டர்களின் கண்ணீருடன் கலைஞரின் உடல் அவரது இல்லம் அமைந்திருக்கும் கோபாலபுரம் சென்றடைந்தது.
கலைஞர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கலைஞர் மரணம் அடைந்ததை அடுத்து அவரது உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கவில்லை . நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் மதிப்பிற்குரிய அமரர் கலைஞர் அவர்களுக்கு, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய, தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அது தான், நாம் அந்த மாமனிதருக்கு கொடுக்கும் தகுந்த மரியாதை என்று அவர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.