முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 4-வது நினைவு நாளை ஒட்டி ஆகஸ்ட் 7ம் முதலமைச்சர் தலைமையில் அமைதி பேரணி. இதுதொடர்பாக சென்னை மாவட்ட திமுகவினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கலைஞர் அவர்களின் 4-வது நினைவுநாளினையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மற்றும் கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட கழக முன்னணியினர் கலந்து கொள்ளும் அமைதிப் பேரணி நடைபெற உள்ளது. ஆகஸ்ட் – 7-ஆம் தேதி […]
தமிழுக்காகவும் தமிழர் நலனுக்காகவும் வாழ்நாளெல்லாம் போராடிய போராளி என கருணாநிதி குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட். முன்னாள் முதல்வரும்,முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாப்களின் அவர்கள் கோபாலபுர இல்லத்தில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில், கலைஞரின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த […]
கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணி அடுத்த மாதம் 30ம் தேதிக்குள் 100% நிறைவு பெறும் என அமைச்சர் தகவல். சர்வதேசத் தரத்தில் ரூ.114 கோடி செலவில் மதுரையில் அமையவிருக்கும் கலைஞர் நினைவு நூலகக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக மதுரை புது நத்தம் சாலையில் பொதுப்பணித்துறை குடியிருப்பு வளாகத்தில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் கலைஞர் நினைவு நூலகம் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணி […]
செம்மொழி தமிழாய்வு அறக்கட்டளையின் சார்பில் 2010 முதல் 2019 வரையிலான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகளுக்கான விருதாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. செம்மொழி தமிழாய்வு அறக்கட்டளையின் சார்பில் 2010 முதல் 2019 வரையிலான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகளுக்கான விருதாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெரு முயற்சியால் இந்தியாவில் முதன்முறையாக தமிழ் மொழியானது 2004-ஆம் ஆண்டு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. செம்மொழித் தமிழுக்கென நிறுவனத்தை தொடங்கப்பட வேண்டும் […]
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதுவரை எந்தெந்த தலைவர்களின் உருவப்படம் திறக்கப்பட்டுள்ளது என்பது பற்றி பாப்போம். 1921-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி, சென்னை மாகாணத்தில், தமிழக சட்டமன்றம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த சட்டமன்றம் தொடங்கி 100-வது ஆண்டை எட்டியுள்ள நிலையில், இன்று நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து இந்த நூற்றாண்டு விழாவில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் உருவப்படம் திறக்கப்பட உள்ளது. இன்று மாலை 5 மணி அளவில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெறும் இந்த விழாவில் குடியரசுத் […]
தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக திண்டுக்கல் லியோனியை தமிழக அரசு நியமித்தது. இந்நிலையில், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நேற்று பொறுப்பேற்றார். அப்போது கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடனிருந்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 2011 ஆம் ஆண்டு ஆசிரியர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று கீழே வைத்த பாடப்புத்தகத்தை 10 ஆண்டுகளுக்குப்பின் 2021ல் மீண்டும் கையிலெடுத்து உள்ளேன். பாடநூல்களை மாணவர்கள் விரும்பி மகிழ்ச்சியாக படிக்கும் வண்ணம் மாற்றுவதே […]
மறைந்த திமுக கட்சியின் தலைவர் மு கருணாநிதி அவர்களின் பெயர் புதுச்சேரி மாநில காரைக்கால் – புறவழிச்சாலைக்கு சூட்ட அம்மாநில ஆளுநர் கிரண் பேடி அனுமதி அளித்துள்ளார். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் மேற்கு புறவழிச்சாலைக்கு கருணாநிதியின் பெயர் சூட்ட ஆளுநர் கிரண்பேடி அனுமதி அளித்துள்ளார் .மேலும் புதுச்சேரியில் உள்ள இந்திராகாந்தி சிலை முதல் ராஜிவ்காந்தி சிலை வரை உள்ள சாலைக்கும் கருணாநிதியின் பெயர் சூட்ட அனுமதி அளித்து உள்ளார் இதனால் இனி இந்த சாலைகள் கருணாநிதி பெயர் […]
கருணாநிதி, அவையில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு சாதுர்யமாகவும், நகைச்சுவையாகவும் பதிலளிக்கும் திறன் கொண்டவர் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில், கருணாநிதியின் மறைவு தமிழகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அயராது உழைத்த கருணாநிதி, இன்று நம்மிடையே இல்லை .சுதந்திர தினத்தன்று, முதல்வர்கள் தேசிய கொடியை ஏற்றும் உரிமையை பெற்றுத்தந்தவர் மற்றும் சமூக நீதிக்காக போராடியவர் கருணாநிதி. பல பதவிகளை வகித்த கருணாநிதி, அவையில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு சாதுர்யமாகவும், நகைச்சுவையாகவும் பதிலளிக்கும் திறன் கொண்டவர். […]
முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ரஜினிகாந்த் அண்ணா அறிவாலயம் வருகை தந்தார். அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா இன்று நடபெறுகிறது.இந்த விழாவில் பங்கேற்க சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும் சென்னை வந்தனர் அவர்களை திமுக சார்பில் கனிமொழி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.இந்நிலையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், முகுல் வாஸ்னிக், திருநாவுக்கரசர், நாராயணசாமி உள்ளிட்டோரும் அவர்களை வரவேற்றனர்.இந்த நிலையில் கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு […]
தானும் வைகோவும் கருணாநிதியால் வளர்க்கப்பட்டவர்கள் என, திமுக பொருளாளர் துரைமுருகன் பேசியுள்ளார். பெரியார் பிறந்த நாள் விழா, அண்ணா பிறந்த நாள் விழா, மதிமுக வெள்ளி விழா – வைகோவின் பொது வாழ்வு பொன் விழா என, மதிமுக சார்பாக இன்று (சனிக்கிழமை) முப்பெரும் விழா மாநில மாநாடு ஈரோட்டில் நடைபெற்றது. இதில், மத்திய பாஜக அரசு மற்றும் அதன் கைப்பாவையாக இயங்கி வருகின்ற அதிமுக அரசு இரண்டையும் வீழ்த்துவதற்கு திமுகவின் தலைமையில், தோழமைக் கட்சிகளுடன் அணி […]
கன்னியாகுமரி , நாகர்கோவிலில் நேற்று நடைபெற்ற திமுக நகர் நிர்வாகிகள் கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு முழு வெண்கல சிலை அமைக்கப்படும் என தீர்மானம் எடுக்கப்பட்டது.. நாகர்கோவிலில் நகர திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.அதில் சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ., உள்ளிட்ட பல முக்கிய திமுக நகர நிர்வாகிககள் பங்கேற்றனர்.அந்த கூட்டத்தில் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.தொடர்ந்து நிர்வாகிகள் பேசினார் இறுதியாக நாகர்கோவிலில் மறைந்த முன்னாள் கருணாநிதிக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது… […]
மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி கோரி திமுக மனு மீதான விசாரணை நடைபெற்றது ,இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய என்ன சட்ட சிக்கல் என்பதை தமிழக அரசு தெளிவு படுத்தவேண்டும் என்றும் இன்று காலை 8 மணிக்கு இதுகுறித்து விசாரணை நடைபெறும் என்று ஒத்திவைத்தனர் .உணரவப்பூர்வமான வழக்கு என்பதால் தமிழக அரசு விரைந்து பதில் அளிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தனர் .இந்த தீர்ப்பை எதிர்பார்த்து அனைவரும் உள்ளனர் […]
கோபாலபுரத்தில் இருந்து கருணாநிதியின் உடல் கனிமொழியின் இல்லமான சிஐடி காலனிக்கு கொண்டுசெல்லபப்டுகிறது .அதன் பின்பு அதிகாலை 4 மணியளவில் ராஜாஜி அரங்கிற்கு கொண்டுவரப்பட உள்ளது இங்கு கருணாநிதியின் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது .
நடிகர் சிவகார்த்திகேயன் ஓய்வில்லாமல் உழைத்த சூரியன் உறங்கப் போகிறது என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி மத்திய அரசு சார்பில் நாளை துக்கம் அனுசரிக்கப்படும் டெல்லி உட்பட நாடு முழுவதும் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும்
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
சி பி எம் அகில இந்திய பொது செயலாளர் திரு சீத்தாராம் யெச்சூரி அவர்கள் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் கலைஞர் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய உத்தரவிடும் படி வலியுறுத்தி உள்ளார்.
காவேரி மருத்துவமனையில் இருந்து பல ஆயிரம் தொண்டர்களின் கண்ணீருடன் கலைஞரின் உடல் அவரது இல்லம் அமைந்திருக்கும் கோபாலபுரம் சென்றடைந்தது.
கலைஞர் மரணம் அடைந்ததை அடுத்து அவரது உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கவில்லை . நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் மதிப்பிற்குரிய அமரர் கலைஞர் அவர்களுக்கு, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய, தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அது தான், நாம் அந்த மாமனிதருக்கு கொடுக்கும் தகுந்த மரியாதை என்று அவர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.