தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், கல்லூரிகள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்கள் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, திருவண்ணாமலை, சென்னை, கரூர் உள்ளிட்ட சுமார் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 2021ம் ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் பரப்புரையின்போதும் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்தது. 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை […]
சென்னையில் கருநகராஜன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அரசியல் காட்சிகள் கொடியேற்றுவது, வழக்கமான அரசியல் நடவடிக்கை. தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட, மத்தியில் ஆளும் பாஜகவின் கொடி மட்டும் பறக்க கூடாது என நினைப்பது மிக மிக தவறான ஒரு முன்னுதாரணத்தை தமிழகத்தில் ஏற்படுத்திவிடும். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால், மற்ற கட்சிகளின் கொடியை ஏற்ற விடாமல் தடுக்க வேண்டுமா? அப்போது திமுக கொடி இங்கு பறக்க கூடாதா? பல பகுதிகளில் பல கட்சிகளின் கொடிகள் […]
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த 26-ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக கூட்டணி வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இதுதொடர்பாக அதிமுக அறிக்கையும் வெளியிட்டது. இதனை தொடர்ந்து, அதிமுகவின் அறிக்கை குறித்து அண்ணாமலை அவர்கள், பாஜக தேசிய தலைமை இதுகுறித்து பேசும் என்று தெரிவித்திருந்தார். அதன்பின், அண்ணாமலை அவர்கள் டெல்லி சென்று அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து அதிமுக-பாஜக கூட்டணி முறிவு குறித்து […]