5 லட்சத்திற்கு வாட்ச் வாங்க வேண்டும் என்றால் 125 ஆடுகள் விற்று இருக்க வேண்டும் என அண்ணாமலை வாட்ச் குறித்து புலம்பெயர் தமிழர் நலவாரியத் தலைவர் சிவசேனாபதி விமர்சனம் செய்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்டியிருக்கும் வாட்ச் விவகாரம் இன்னும் அரசியல் வட்டாரத்தில் புகைந்து கொண்டே இருக்கிறது. இந்த வாட்ச் குறித்து இன்று காங்கேயத்தில் புலம்பெயர் தமிழர் நலவாரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், அண்ணாமலை அவர்கள், அந்த வாட்ச்சிற்கு […]