கட்சி முடிவுக்கு கட்டுப்படுவேன் என்றும் தலைமை வாய்ப்பு கொடுத்தால் தேர்தலில் எந்த தொகுதியில் வேண்டுமென்றாலும் நிற்பேன் எனவும் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் கார்த்தி சிதம்பரம் பேசும் போது, “சிவங்கையில் போட்டியிட திமுகவினரும், காங்கிரஸ் கட்சியிலேயே சிலரும் முயல்வது குறித்து கேட்கிறீர்கள், ஜனநாயக நாட்டில் இது போன்ற போட்டிகள் இயல்பு தான், உயிரோட்டமான காங்கிரஸ் கட்சியில் இதுபோல யாரும் தங்களுக்கான வாய்ப்பைக் […]
சிவகங்கையில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் எம்.பி கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக கட்சியின் ஒரு தரப்பினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் முத்த தலைவர்கள் சுதர்சன நாச்சியப்பன், K.R ராமசாமி உள்ளிட்டோர் முன்னர் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியின் எம்.பியாக காங்கிரஸ் கட்சியின் கார்த்தி சிதம்பரம் பதவி வகிக்கும் நிலையில் அவர் அவ்வபோது மோடியை புகழ்வதாகவும், காங்கிரசின் முடிவுகளுக்கு எதிராக பேசுவதாகவும் விமர்சனங்கள் எழுகின்றன. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்புகள் […]
ஐஎன்எக்ஸ் நிறுவனம் கட்டடம் கட்டுவதற்காக நிதியுதவி வெளிநாட்டில் இருந்து முறைகேடாக பெறப்பட்டதாக அதற்கு துணையாக முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பா.சிதம்பரத்தின் மகனான கார்த்திக் சிதம்பரம் மீது, சிபிஐ மற்றும் அமலாக்க துறையினர் அவர் மீது குற்றம் சாட்டி, அவரை வெளிநாடுகள் செல்ல விடாமல் வைத்திருந்தனர். தற்போது அந்த தடையை நீக்கவும், மே மற்றும் ஜூன் மாதங்களில் ஜெர்மனி, அமெரிக்க மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு செல்ல உச்சநீதி மன்றத்தில் அனுமதி கேட்டிருந்தார். அதற்க்கு, […]
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான ரூ.22.28 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை. ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லாச் சான்று பெற்றுத் தருவதாக சட்டவிரோதமாக வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு டில்லியிலுள்ள திகார் சிறையில் கார்த்தி சிதம்பரம் அடைக்கப்பட்டார்.ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்கியது […]
சிவகங்கை தொகுதி வேட்பாளர் விவகாரம் குறித்து அந்த தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் 9 தொகுதிகள் காண வேட்பாளர்களை அறிவித்தது.ஆனால் சிவகங்கை தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பதில் பல்வேறு குழப்பங்கள் நீடித்தது. பின்னர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சிவகங்கை தொகுதி ஒதுக்கப்பட்டது. 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சுதர்சனநாச்சியப்பன் தமாகா சார்பில் நின்ற ப.சிதம்பரத்தை வென்றார். […]
மக்களவை தேர்தல் களம் நாடு முழுவதும் சூடுபிடித்துள்ளது. சிவகங்கை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் சூடுபிடித்துள்ளது.அதேபோல் தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்து வேட்பாளர் பட்டியலை அறிவித்து பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை இறுதிப்படுத்தும் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதன் முடிவில், தமிழகம் மற்றும் […]