கடவுளை வணங்கும் போது நாம் செய்யும் முக்கிய செயல்களில் ஒன்று கற்பூரம் காட்டுவது. அந்த கற்பூரமானது மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது. அதன் பலன்கள் நம் உடலுக்கும் நல்லது தரும். நாம் கடவுளை கோவில் சென்று வணங்கும் போது அங்கு கர்ப்பகிரகத்தில் உள்ள கடவுள் சிலை நோக்கி கற்பூர தீபாராதனை காட்டப்பட்டு அந்த கற்பூரமானது நமக்கு காட்டப்படுகிறது. அதாவது பெரும்பாலான கோவில்களில் கருவறையில் மின்விளக்குகள் இருப்பதில்லை. கற்பூர ஒளியில் மூலம் மட்டுமே நாம் இறைவனை தரிசிக்க முடியும். […]