கர்நாடகாவில் தென்கனரா மாவட்டம், பெல்தங்கடி அருகே உள்ள எருமாள் நீர்வீழ்ச்சியில் திரைப்பட சூட்டிங் நடைபெற்று வந்தது. இந்த திரைப்படத்தை இயக்குனர் சந்தோஷ் ஷெட்டி என்பவர் நடத்தி வந்தார். நேற்று சூட்டிங் நடந்து கொண்டிருந்த போது பெய்த பலத்த மழையால் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதில் சிக்கி கொண்ட சந்தோஷ் ஷெட்டி நீரில் அடித்து செல்லப்பட்டார். பல மணி நேரத்திற்குபின் சந்தோஷ் ஷெட்டி சடலம் கரை ஒதுங்கியது.