காவிரியில் இருந்து, தமிழகத்திற்கு தரவேண்டிய உரிய அளவு தண்ணீரை, உச்சநீதிமன்ற உத்தரவுபடி திறந்து விட கர்நாடகா அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. காவிரி ஒழுங்காற்று குழு கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில், தமிழகத்திற்கு வினாடிக்கு 3000 கனஅடி நீர் அடுத்த 10 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று காவிரி ஒழுங்காற்று குழுவின் 88-வது கூட்டம், தலைவர் வினீத் குப்தா தலைமையில் […]
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில்,தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,கடந்த ஆண்டு பிரதமரை சந்தித்தபோது காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கைவிட கர்நாடக அரசுக்கு ஆலோசனை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து,தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள்,மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து மேகதாது அணைகட்டும் திட்டத்திற்கு எந்தவித அனுமதியும் அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில்,உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் மேகதாது அணை குறித்து […]
கர்நாடகாவுக்கு வரும் பயணிகள் கட்டாயமாக 72 மணி நேரத்திற்கு முன்பாக பரிசோதிக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வர வேண்டும். இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .அதன் அடிப்படையில் பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நிலையில், தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் சில மாநிலங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டு […]
மராட்டியத்தில் இருந்து வருபவர்களுக்கு 7 நாட்கள் தனிமை போதும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுபடுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள 5-ம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது, வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ளவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். […]