கர்நாடகாவில் ராஜினாமா செய்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது .அவர்களது மனுவில் ,தங்கள் ராஜினாமா கடிதத்தை ஏற்காமல் சபாநாயகர் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.நாளை கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவுள்ள நிலையில் இன்று தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்.
கர்நாடகாவில் ராஜினாமா செய்த காங்கிரஸ் மற்றும் ம.ஜ.தள எம்.எல்.ஏ.க்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது . தங்கள் ராஜினாமா கடிதத்தை ஏற்காமல் சபாநாயகர் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருவதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.