கர்நாடகாவில் காலியாக இருக்கும் 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கு தகுதி நீக்கம் செய்த 17 எம்.எல்.ஏ.க்களும் எதிர்ப்பு தெறிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்த இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதால், இந்த வழக்கில் முடிவு எட்டப்படும் வரை தேர்தலை தள்ளிவைக்க முடியுமா? என உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையத்திடம் கேட்டது. இதற்கு […]
கர்நாடகா துணை முதலமைச்சர் பதவிக்கு குறி வைத்துள்ள காங்கிரஸ் கட்சியின் டி.கே.சிவக்குமார், தமது பணிக்காக மேலிடம் நியாயமான பதவியை வழங்கும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில புதிய முதலமைச்சராக வரும் புதன்கிழமை குமாரசாமி பதவியேற்க உள்ளார். இதற்காக, பெங்களூரில் உள்ள கண்டீரவா மைதானத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்படும் நிலையில், அவருடன் துணை முதலமைச்சராக பரமேஸ்வராவும், மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அமைச்சர் பதவியும் ஏற்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த […]
காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் கர்நாடகா புதிய முதல்-மந்திரியாக குமாரசாமி வருகிற 23-ந்தேதி பதவி ஏற்கிறார். இந்த நிலையில் முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும், குமாரசாமியின் தந்தையுமான தேவேகவுடா ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- எனது மகன் குமாரசாமி முதல்-மந்திரியாவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மதச்சார்பற்ற தன்மையுள்ள ஒரு ஆட்சியை உருவாக்க முடிந்தது எனக்கு நிம்மதியை தருகிறது. வகுப்பு வாத கட்சியை தடுத்து நிறுத்தக் கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை பெற்று இருந்தது திருப்தி […]
கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியைப் பறிகொடுத்ததை கிண்டல் செய்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், மேட்ச் தொடங்கும் முன்பே முடிந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில் பெரும்பான்மை இல்லாமல் 104 எம்எல்ஏக்களுடன் எடியூரப்பா முதல்வராகப் பதவி ஏற்றார். இதை எதிர்த்து காங்கிரஸ், மதச் சார்பற்ற ஜனதா தளம் சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் எடியூரப்பா அரசை 19-ம் தேதி மாலை 4 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது. ஆனால், பெரும்பான்மை வாக்கெடுப்பு நடக்கும் முன்பே எடியூரப்பா […]
போபையா நியமனத்திற்கு எதிராக வாதிட கபில் சிபல், அபிஷேக் சிங்வி, ராம்ஜெத் மலானி உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர் வாதத்தை தொடங்கிய கபில் சிபில் , கர்நாடக தற்காலிக சபாநாயகர் போதிய அனுபவம் இல்லாதவர்என்றும் போபையாவுக்கு எதிராக உச்சநீதிமன்றமே உத்தரவு பிறப்பித்துள்ளது என்றும் கபில் சிபல் வாதிட்டார்.மேலும் போபையா தற்காலிக சபநாயகராக இருந்தால் நம்பிக்கை வாக்கெடுப்பு சரியாக நடக்காது என்று காங்கிரஸ் வாதிட்டது. கர்நாடக சட்டப்பேரவையில் மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பை போபையாதான் நடத்துவார் கர்நாடக தற்காலிக […]
காங்கிரஸ் MLA க்கள் இருவர் சட்டமன்றத்திற்கு வரவில்லை என தகவல் வந்துள்ளது. கர்நாடக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழா தொடங்கி உள்ளது. கர்நாடக சட்டப்பேரவையில் முதல் நபராக எம்.எல்.ஏவாக பதவியேற்றார் எடியூரப்பா. அதன் பின் ஒவொருவராக பதவி ஏற்க உள்ளனர் இந்நிலையில் காங்கிரஸ் MLAக்களான ஆனந்த்சிங் மற்றும் பிரதாப் கவுடா ஆகிய இருவர் சட்டமன்றத்திற்கு வரவில்லை என தகவல் வந்துள்ளது.
எடியூரப்பாவை கர்நாடக ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்தது ஒருதலைப்பட்சமானது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஜனநாயக குரல்வளையை நெரிக்கும் ஆளுநரின் செயல் கண்டிக்கத்தக்கது என்றும் கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்ததை கண்டித்து, நள்ளிரவில் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டு இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பிரதமர் மோடியின் உருவ படங்களை எரித்து முழக்கங்களை எழுப்பினர்