வெளுத்து வாங்கும் கனமழையால் கர்நாடகாவில் 7 மாவட்டங்களுக்கு சிவப்பு அலெர்ட். இந்திய வானிலை மையம் கர்நாடகாவில் உள்ள தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி, சிக்கமங்களூரு, ஷிவமொக்கா, குடகு மற்றும் ஹாசன் ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஜூன் 1 முதல் தற்போது வரை பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட பல்வேறு சம்பவங்களால் 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.