அசாமில் 6 ஆண்கள் சேர்ந்து 2 சகோதரிகளை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திரிபுராவை சேர்ந்த இரண்டு சகோதரிகள் வெள்ளிக்கிழமையன்று தனது தாயை சில்சாரில் உள்ள கேன்சர் மருத்துவமனையில் சந்தித்து விட்டு வாடகை காரில் திரும்பியுள்ளனர் . அப்போது கார் அசாம் மாநிலத்தில் உள்ள கரீம்கஞ்ச் பகுதியில் நுழைந்த போது , காரை ஓட்டி வந்த ஓட்டுநர் அந்த இரு பெண்களையும் புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் ஒன்றில் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளார். […]