கார்கில் : 1999ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரில் இந்திய ராணுவ வீரர்கள் வெற்றி பெற்றதை குறிப்பிடும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 26ஆம் தேதி கார்கில் நினைவு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் 25ஆம் ஆண்டு கார்கில் நினைவு தின கொண்டாட்டம் காஷ்மீர் முதல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. கார்கில் நினைவு தினத்தை முன்னிட்டு காஷ்மீர், கார்கில் மாவட்டத்தில் டிராஸ் எனுமிடத்தில் நடைபெற்று வரும் ராணுவ நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். […]