கார்கில் : 1999ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரில் இந்திய ராணுவ வீரர்கள் வெற்றி பெற்றதை குறிப்பிடும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 26ஆம் தேதி கார்கில் நினைவு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் 25ஆம் ஆண்டு கார்கில் நினைவு தின கொண்டாட்டம் காஷ்மீர் முதல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. கார்கில் நினைவு தினத்தை முன்னிட்டு காஷ்மீர், கார்கில் மாவட்டத்தில் டிராஸ் எனுமிடத்தில் நடைபெற்று வரும் ராணுவ நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். […]
லடாக்கின் கார்கில் இன்று காலை 9:22 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பொருட்சேதம், உயிர் சேதம் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் தெரியவரவில்லை. இதற்கு முன் அக்டோபர் 6 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் ரிக்டர் அளவில் 5.1 என்ற நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தினார். ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் மாவட்டத்தில் இந்திய – பாகிஸ்தான் ராணுவத்திற்கு இடையே 1999-ஆம் ஆண்டு மே மாதம் துவங்கி ஜூலை வரை நடைபெற்ற கார்கில் போரில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும், அதிகாரிகளும் நாட்டுக்காக தங்களது உயிரை இழந்தனர். ராணுவ வீரர்களுக்கு கவுரவிக்கும் விதமாகவும், அஞ்சலி செலுத்தும் விதமாகவும் இன்று கார்கில் நினைவு தினம் […]
லடாக் மாநிலம், கார்கிலில் இன்று மதியம் சுமார் 1.11 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் ரிக்டர் அளவு 4.5 ஆக பதிவானது. கார்கில் மாவட்டதில் வட மேற்கு பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
சமீபத்தில் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு எதிராக வதந்திகள் பரவி வன்முறைகள் வராமல் இருக்க இணையதள சேவை முடக்கப்பட்டது.145 நாட்களுக்கு பிறகு மீண்டும் இணையதள சேவை வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35 ஏ ரத்து எனவும் , ஜம்மு காஷ்மீர் , லடாக் இரண்டும் யூனியன் பிரதேசமாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு […]
காஷ்மீரின் கார்கில் பகுதியில் கடந்த 1999-ஆம் ஆண்டு ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவம் வெளியேற்ற இந்திய ராணுவம் ஆபரேஷன் விஜய் என்ற பெயரில் இரண்டு மாதங்களாக போர் நடத்தினர். இந்தப் போரின் முடிவில் இந்திய ராணுவம் வெற்றி பெற்றது. இந்நிலையில் கார்கில் போர் வெற்றியின் 20-வது ஆண்டு அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று முன் தினம் ஒரு நாள் பயணமாக காஷ்மீர் சென்று அங்கு கார்கில் பகுதியில் கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களின் […]