ராஜஸ்தான் மாநிலத்தில் உருமாறிய கொரோனோவான கப்பா வைரஸ் 11 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் வூஹான் பகுதியில் ஆரம்பித்த இந்த கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி பல்வேறு உயிர்சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தற்போது இந்த கொரோனா வைரஸ் டெல்டா, டெல்டா பிளஸ், ஆல்பா, லாம்டா, கப்பா என பல வகைகளில் உருமாற்றம் அடைந்துள்ளது. இந்தியாவில் டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் கொரோனா தொற்றுகள் பரவி வரும் நிலையில் கப்பா வைரஸ்-ம் பரவ ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே […]
இந்தியாவில் லாம்டா வகை கொரோனா தொற்று யாருக்கும் உறுதியாகவில்லை. உத்திரபிரதேசத்தில் கப்பா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்து தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்ததை அடுத்து, நாட்டில் கடைபிடிக்கப்பட்ட கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு காரணமாக தற்போது கொரோனாவின் தாக்கம் சற்று குறைய ஆரம்பித்துள்ளது. அதனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மாநில அரசுகள் வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று ஒன்றிய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் கட்டுப்பாடுகளை […]