காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கபில் சிபல் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார்.இதனைத் தொடர்ந்து,மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட கபில் சிபல் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதனிடையே,காங்கிரஸ் தலைமை பொறுப்புகளில் இருந்து காந்தி குடும்பம் தாமாக முன்வந்து பதவி விலக வேண்டும் என்று கபில் கூறியிருந்த நிலையில்,தற்போது கட்சியிலிருந்து விலகியுள்ளார். இதனையடுத்து,கபில் சிபலுக்கு சமாஜ்வாதி கட்சி ஆதரவு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி,சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் அக்கட்சியின் எம்பி ராம் கோபால் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி கட்சியின் […]
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது.மக்களைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை தொடர்ந்து தோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் தேசியத் தலைவராக இருந்த ராகுல்கந்தி தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் எழுந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாககாங்கிரஸ் கட்சியில் தலைமை முதல் கீழ்மட்டம் வரை […]
கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிறகு, இரு வேறுபட்ட இந்தியா உருவாகி உள்ளது என்று கபில் சிபில் விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் அவர் பதிவிட்டுள்ளதாவது: ஒரு இந்தியா வீட்டில் இருந்தபடி யோகா செய்கிறது; டிவியில் ராமாயணம் பார்க்கிறது; பாட்டுப்போட்டி நடத்துகிறது. மற்றொரு இந்தியாவோ, வீட்டுக்கு செல்ல முயற்சிக்கிறது. அந்த இந்தியா, உணவு, தங்குமிடமின்றி, ஆதரவின்றி என தன் வாழ்வுக்காக போராடுகிறது. இந்நிலையில் கபிலின் இந்த விமர்சனமானது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பிரதமர் மோடி யோகா […]