மத்திய அரசு மத அரசியல் செய்கிறது, அவர்களுக்கு ஏழைகளை பற்றி கவலை இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகிய கபில் சிபல் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர் பாஜக தலைவர்கள் உண்மையான உலகத்தில் இல்லை எனவும், அதன் காரணமாகத்தான் ஏழைகளின் வருமானம் உயர்ந்து இருப்பதாக பாஜக கூறி வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஒரு மாதத்திற்கு ஆறாயிரம் சம்பாதிக்க கூடிய ஒருவர், மாதம் இருபத்தைந்தாயிரம் […]
காங்கிரஸ் கட்சிக்கு உட்கட்சி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் தேவை. காங்கிரஸ் கட்சியை தற்போது இருக்கும் நிலையில் பார்க்க விரும்பவில்லை என கபில் சிபில் தெரிவித்தார். கடந்த சில நாட்களாக பஞ்சாப், கோவா போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கட்சியிலிருந்து விலகியும், பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். இதுகுறித்து தொடர்பாக பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில், காங்கிரஸில் யார் முடிவெடுக்கிறார் என்று தெரியவில்லை. ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் கட்சியை எப்படி வலுப்படுத்த முடியும் […]
பீகார் தேர்தல் தோல்வி உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த கபில் சிபல், மக்களால் பாஜகவிற்கு எதிராக வலுவான மாற்றுக்கட்சியாக காங்கிரஸ் பார்க்கப்படவில்லை. உள்கட்சி பேச்சுவார்த்தையில் ஈடுபவது தொடர்பாக காங்கிரஸ் தலைமை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அமைப்பு ரீதியாக என்ன பிரச்சனை என்பது எங்களுக்கு தெரியும். அதற்கான பதில்களும் உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கும் அதற்கான பதில் தெரியும். ஆனால், அவர்கள் அந்த பதிலை ஏற்க மறுக்கின்றனர் என தெரிவித்தார். இந்நிலையில், கபில் சிபலின் […]
காங்கிரஸ் தலைவர்கள் குறித்து ராகுல்காந்தி குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் எழுந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சியில் தலைமை முதல் கீழ்மட்டம் வரை […]
ராஜஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த, தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வர் பதவியை பெறுவதில் மூத்த தலைவர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே போட்டி நிலவியது. பின்னர், மேலிடம் அசோக் கெலாட்டை முதலமைச்சராகவும், சச்சின் பைலட்டுக்கு துணை முதலமைச்சராகவும் நியமித்தது. இதனால் இருவருக்கும் இடையே தொடர்ந்து அதிருப்தி நிலவி வருகிறது. தற்போது, சச்சின் பைலடன் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 25 பேருடன் டெல்லியில் […]
சபரிமலை விவகாரம் தொடர்பான விசாரணை நிறைவடைந்த பிறகே, சி.ஏ.ஏ குறித்து விசாரணை நடக்கும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்தார். பின்னர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைக்கு தேதி முடிவு செய்ய கபில் சிபல் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் மூத்த வழக்கறிஞர் கபில் சிபலின் கோரிக்கையை நிராகரித்தார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி. இதையடுத்து சபரிமலை தொடர்பான வழக்கு மார்ச் 16ம் தேதி தொடங்குகிறது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் சிபிஐ-க்கு எதிரான வழக்கு தொடர்பான விசாரணை 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.மேலும் அமலாக்கத்துறை வழக்கில் வருகின்ற 26-ஆம் தேதி வரை முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்.இதை எதிர்த்து சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு எதிராக சிதம்பரம் தரப்பில் இரண்டு மனுக்கள் தாக்கல் […]
டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யாமலிருக்க முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் .இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது. பின் டெல்லி உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்ததை அடுத்து உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.இந்த மேல்முறையீட்டு வழக்கில்,மூத்த வழக்கறிஞர்களான கபில் சிபில்,சல்மான் குர்ஷித் விவேக் தங்கா ஆகியோர் வாதிட உள்ளனர்.
விஐபிக்கள், நீதிபதிகள் வாகனங்களுக்கு சுங்கச்சாவடியில் தனிப்பாதை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில் நீதிபதிகளுக்கு வலியுறுத்தியுள்ளார். விஐபிக்கள், நீதிபதிகள் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் தனிப்பாதைகள் அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு காங். மூத்த தலைவர் கபில் சிபல் ட்வீட் செய்துள்ளார். அதில் ஒரு 15 நிமிடங்கள் சுங்கச்சாவடிகளில் காத்திருப்பதற்கு வருந்துவதைவிட, நீதிமன்றங்களில் பல வழக்குகள் தேக்கமடைந்திருப்பதை நினைத்தும் நீதிபதிகள் சற்று வருந்த வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில் சாடியுள்ளார். நீதிமன்றம் விஐபிக்கள், […]