கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி தக்கலை அருகே உள்ள புலியூர்க்குறிச்சியில் 5வது நாளாக விவசாய அமைப்பினர் 100க்கும் மேற்பட்டோர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓக்கி புயலின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பல லட்சம் மதிப்புள்ள தென்னை,வாழை,நெல் போன்ற விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.