நாகர்கோவிலை சேர்ந்த பெண் மஷா நசிம் ‘அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான’ தனது பங்களிப்புக்காக கௌரவ தேசிய இளைஞர் விருதைப் பெறுகிறார். அவர் தற்போது மாநில அரசு அதிகாரிகள் பயன் படுத்தும் அளவில் ஹைடெக் ரெயில் கழிப்பறை முறை, எரிபொருள் விநியோகங்கள், எதிர்ப்பு மூழ்கி எச்சரிக்கை போன்று 14 சமூக பயன்பாட்டு கேஜெட்களை கண்டுபிடித்துள்ளார். 2016ஆம் ஆண்டிற்கான மாநில இளைஞர் விருது உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும் இந்த விருதை இன்று அவர் பிரதமர் நரேந்திர மோடி கையால் வாங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கூடங்குளத்தின் முதல் 2 அணு உலைகளின் சார்பற்ற அறிக்கையை வெளியிட வேண்டும். கூடங்குளம் அணு உலை முறைகேடு குறித்து அரசியல் கட்சிகள் பேச மறுக்கின்றன கூடங்குளம் அணு உலை முறைகேடு குறித்து யார்மீது வழக்குப்பதிய உள்ளார்கள் என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் தெரிவித்துள்ளார்.