கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், விதிமீறி வைக்கப்பட்டிருந்த டிடிவி தினகரனின் விளம்பர பேனர்கள் காவல்துறையினர் உதவியுடன் அகற்றப்பட்டன. நாகர்கோவிலில் பல்வேறு பகுதிகளில் டிடிவி தினகரனுக்கு விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. விபத்துக்குள் ஏற்படும் என்பதைக்கூட பொருட்படுத்தாமல், சாலையை மறித்து அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டிருந்தன. நீதிமன்ற உத்தரவுகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தையடுத்து, நகராட்சி ஊழியர்கள் பேனர்களை அகற்ற முயன்றனர். அப்போது, அங்கு வந்த அமமுகவினர், ஊழியர்களை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், நீதிமன்ற உத்தரவுப்படி ஊழியர்கள் நடவடிக்கை எடுப்பதாக, […]