திருநெல்வேலி : தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை. விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இந்த சூழலில், இன்று நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் இன்று முதல் நாளை காலை வரை மிக கனமழைக்கு […]
கன்னியாகுமரி : கனமழை காரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. இதேபோல், இன்றும் அந்த மாவட்டத்திற்கு வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அழகு மீனா விடுமுறை அறிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தின் 6 இடங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை பதிவாகியுள்ளது. நேற்று காலை 6 மணி […]
சென்னை : விஜயதசமியை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பேரணி நடத்தி வருகின்றனர். கடந்த அக்டோபர் 6ஆம் தேதி ஞாயிற்று கிழமையன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த ஈசாத்தி மங்கலம் பகுதியில் இருந்து பூதப்பாண்டி வரை ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது. இந்த ஆர்எஸ்எஸ் பேரணியை கன்னியகுமாரி தொகுதி அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார். ஏற்கனவே அதிமுக – பாஜக கூட்டணி முறிவு ஏற்பட்டு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனி […]
கன்னியாகுமரி : தமிழக மின்சாரவாரியம் நாளை ஆகஸ்ட் 02/08/2024 கன்னியாகுமரியில் பல இடங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்புபணி காரணமாக நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள். நாகர்கோவில் பெருவிளை, ஆசாரிபள்ளம், பார்வதிபுரம், அலம்பரை ஆகிய இடங்களில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். தடிக்காரன்கோணம் கிரிபாரி, கடுக்கரை, பூதபாண்டி காலை ஆகிய பகுதிகளில் 8 மணி முதல் […]
ஆன்மீக சுற்றுலா : சென்னை, தஞ்சாவூர். கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களை தலைமையிடமாக கொண்டு நடைபெறும் ஆடி மாத அம்மன் திருக்கோயில் ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் மூத்த குடிமக்கள், அதாவது 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக் கோரிக்கையின் விவாதத்தில் […]
மக்களவை தேர்தல் : 2024 மக்களவை தேர்தலின் வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தற்பொழுது, முன்னிலை விவரங்கள் மற்றும் வெற்றி வெற்றிப்பாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி கொண்டே வருகிறது. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 4,15,867 வாக்குகள் பெற்று 1,49,503 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை எதிர்த்து அந்த தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் 266364 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் […]
கன்னியாகுமரி: நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், நேற்று முன்தினம் (மே 30) 3 நாள் பயணமாக கன்னியாகுமரி வந்திருந்த பிரதமர் மோடி அன்றைய தினம் பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர், அன்று மாலை கடலுக்கு நடுவே இருக்கும் விவேகானந்தர் மண்டபத்திற்கு சிறப்பு படகு மூலம் சென்ற பிரதமர் மோடி, விவேகானந்தர் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு தனது 45 மணிநேர தியானத்தை தொடங்கினார். பிரதமர் மோடி தியானம் செய்யும் புகைப்படங்கள், வீடியோக்கள், […]
அண்ணாமலை : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஜூன் 1 ( இன்று) காலை திருவண்ணாமலையில் இருக்கும் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வழிபாடு செய்ய வருகை தந்தார். சுவாமி தரிசனம் முடித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது போலீஸ் அதிகாரிகள் ஓய்வு பெறும் கடைசி நாளில் சஸ்பெண்டு செய்யப்படுவது குறித்தும், பிரதமர் மோடி தியானம் செய்ய கன்னியாக்குமரிக்கு சென்றது பற்றியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணி இறுதி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காதது பற்றியும் பேசியுள்ளார். இது குறித்து பேசிய பாஜக […]
கன்னியகுமாரி: தேர்தல் பிரச்சாரம் முடிந்ததை அடுத்து, 3 நாட்கள் தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் தனது தியானத்தை தொடங்கினார். பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி உட்பட , நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரங்கள் இன்றுடன் நிறைவுபெற்றுவிட்டன. இதனை அடுத்து, இன்று முதல் ஜூன் 1 வரையில் 3 நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார். உ.பி வாரணாசியில் இருந்து தனி விமானம் மூலம் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் வந்திறங்கிய மோடி, […]
தேர்தல் விதிமுறைகள்: இறுதிக்கட்ட பிரச்சாரம் முடிந்த பிறகு வாக்குப்பதிவு சமயத்தில் பிரதமர் மோடியின் தியான நிகழ்வானது தேர்தல் விதிமுறை மீறல் என காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 3 நாள் பயணமாக கன்னியாகுமரி வரவுள்ளார். இன்று மாலை 5.30 மணி முதல் ஜூன் 1ஆம் தேதி பிற்பகல் வரையில் பிரதமர் மோடி விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்ள உள்ளார். பிரதமரின் தியான நிகழ்வுகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் என கூறப்படுகிறது. […]
சென்னை: தமிழகத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் சற்று வெயில் குறைந்து மிதமான மழை கனமழை என வெயிலுக்கு குளிர்ச்சி தரும் வகையில் பெய்து கொண்டு இருக்கிறது. அதன்படி, இன்று காஞ்சிபுரம், சேலம், சிவகங்கை, பெரம்பலூர், தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் சூறைக் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு […]
சென்னை : தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் சற்று வெயில் குறைந்து மிதமான மழை கனமழை என வெயிலுக்கு குளிர்ச்சி தரும் வகையில் பெய்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இன்று மழை பெய்தது. இந்த நிலையில், (மே 14) தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், கன்னியாகுமரி […]
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் தமிழ்நாடு மாநிலம் அரசுப் பேருந்தும், கேரளா மாநிலம் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அதாவது, தமிழக அரசு பேருந்து ஒன்று களியக்காவிளையிலிருந்து நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருக்கையில், அதேபோல் எதிரே நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கேரள அரசுப் பேருந்தும் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் ஒன்றுக்கு ஒன்று எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது. பஞ்சாப் ஆளுநர் […]
கன்னியாகுமாரி மாவட்டம் பூதப்பாண்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட அருமநல்லூர் எனும் கிராமத்தில் மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி சிலை நிறுவப்பட்டு இருந்தது. நேற்று தீபாவளி தினத்தன்று நள்ளிரவில், மேற்ககண்ட இடத்தில் இருந்த ராஜீவ் காந்தி சிலையை மர்ம நபர்கள் உடைத்தனர். விடியற்காலை சேதப்படுத்தப்ட்ட சிலையை கண்ட பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பூதப்பாண்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சிலை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தேடும் பணியை […]
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குமரி கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதால் தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி அரசு பள்ளியில் மாணவிகளுக்கு ஆபாச படமெடுத்த ஆசிரியர் கிருஸ்து தாஸ், போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இரணியல் பகுதி அரசு பள்ளியில், அக்கவுண்டன்சி படமெடுத்துவந்த ஆசிரியர் கிருஸ்து தாஸ் என்பவர், தன்னுடைய வகுப்பு மாணவிகளுக்கு ஆபாச பாடம் எடுத்ததாக புகார் எழுந்தது. முதலில் அப்பகுதி காவல் நிலையத்தில் மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 6ஆம் தேதி பெற்றோர்கள், பள்ளி […]
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலின் கும்பாபிஷேகம் இன்று(ஜூலை 6 ஆம் தேதி) நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு,கல்வி நிறுவனங்கள் மற்றும் மாவட்ட அரசு அலுவலங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.எனினும்,அவசர கால பணிகளுக்காக மட்டும் மாவட்டத்தில் உள்ள தலைமை அலுவலகம் வழக்கம் போல இயங்கும். மேலும்,இன்றைய உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வருகின்ற ஜூலை 23 ஆம் தேதியன்று சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலின் கும்பாபிசேகமானது […]
சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியாகிய எதற்கும் துணிந்தவன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் பாலா இயக்கத்தில் புதிய படமொன்றில் சூர்யா நடிக்கிறார். இந்த படத்தை சொரியாவின் 2டி இன்டெர்த்தயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு ஜி.வி.பிரகாஸ் இசையமைக்கிறார். 18 வருடங்களுக்கு பின்பதாக பாலாவுடன் கூட்டணி சேர்ந்துள்ள சூரியாவின் இந்த புதிய படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த வாரம் கன்னியாகுமரியில் தொடங்கிய நிலையில், […]
கன்னியாகுமாரியில் மீன் வாங்கி வந்து சமைக்க சொல்லி தந்தையை தொந்தரவு செய்துள்ளார் மகன். அப்போது ஏற்பட்ட தகராறில் தந்தை தள்ளிவிட்டு மகன் உயிரிழந்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் புத்தேரியில் ஆட்டுப்பட்டி காலனியில் வசித்து வருபவர் தங்கவேல். இவரது மகன் பெயர் கோலப்பன். கோலப்பன், தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தந்தையுடன் வசித்து வந்துள்ளார். கோலப்பன் அடிக்கடி மது குடிக்கும் பழக்கம் உள்ளவர் என கூறப்படுகிறது. சம்பவத்தன்று கோலப்பன் மீன் வாங்கி வந்துள்ளார். அந்த மீனை சமைத்து […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் தவறான சிகிச்சையின் பெயரில் 12 வயது சிறுவன் உயிரிழந்தான். சிகிச்சை அளித்த ஹோமியோபதி மருத்துவர் தலைமறைவானார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடையாலுமூடு எனும் பகுதியை சேர்ந்த அபினேஷ் என்கிற சிறுவன் சில நாட்களுக்கு முன்னர் காய்ச்சல் காரணமாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். காய்ச்சல் சிகிச்சை பெற்று வந்த அச்சிறுவன் நேற்று திடீரென உயிரிழந்தான். இதனால், சிறுவனின் உயிரிழப்புக்கு தவறான மருத்துவ சிகிச்சையே காரணம் எனவும், ஆதலால், மருத்துவரை கைது செய்து, குறிப்பிட்ட […]