கன்னியாகுமரி: கந்துவட்டி கொடுமையால் ஜான் என்ற 75வயது முதியவர் தூக்கிட்டு தற்கொலை வாங்கிய கடனை திரும்பக் கொடுக்காததால் பிரசன்னகுமார் என்பவர் கொலை மிரட்டல் விடுத்ததாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மார்த்தாண்டம் காவல் ஆய்வாளருக்கு கடிதம்
கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு கடைசியில் வந்த ஒகி புயலால் மக்கள் பெரிய பாதிப்புக்குள்ளகினர்.இதனால் குமரி மக்கள் இன்னும் அந்த தாக்கத்தில் இருந்து மீளவில்லை .எனவே கன்னியாகுமரி மாவட்டம் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும்,மீனவர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பத்மநாபபுரம் சட்ட மன்ற உறுப்பினர் மனோதங்கராஜ் தலைமையில் தக்கலை அருகே புலியூர்க்குறிச்சி பகுதியில் 3வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர் .நிவாரணம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளார். source: www.dinasuvadu.com
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற்றியுள்ளது .இதனால் கன்னியாகுமரி, நாகர்கோவில்,தூத்துக்குடி மற்றும் நெல்லையில் உள்ள மரங்களை வேறொடு பிடுங்கி எறிகிறது அந்த புயல். கன்னியாகுமரிக்கு தெற்கே 60 கி,மீ தொலைவில் புயல் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு ஓகி என பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் அறிவித்து இருந்தது.இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பலத்த காற்று […]