மறைந்த நடிகர் சேதுராமனுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளனர். கடந்த 2013ல் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சேதுராமன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் ஒரு தோல் நோய் மருத்துவரும் கூட ஆவார். அதனையடுத்து வாலிபராஜா, சக்க போடு போடு ராஜா என ஒரு சில படங்களில் நடித்திருந்தார். கடந்த மார்ச் 24ம் தேதி திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். இது சந்தானம் உட்பட பலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 35 வயதில் இறந்த […]
நடிகர் சேதுராமன் ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் இந்த படத்தில், நடிகர் சந்தானத்துடன் இணைந்து நடித்துள்ளார். மிக இளமையான வயதில், தற்போது மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் சினிமா துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.