பெற்றோரிடம் சொல்லாமல் நகலாந்திலிருந்து காஞ்சிபுரம் இரண்டு சிறுவர்கள்!

பெற்றோரிடம் சொல்லாமல் நகலாந்திலிருந்து காஞ்சிபுரம் இரண்டு சிறுவர்களை மீட்ட காவல்துறையினர். பதினொன்றாம் வகுப்பு படிக்க கூடிய மாணவன் ஒருவனும், ஒன்பதாம் வகுப்பு படிக்க கூடிய மாணவியும் கடந்த மார்ச் மாதம் நாகலாந்து மாநிலத்தில் திம்மாபூர் எனும் மாவட்டத்தில் இருந்து தங்கள் பெற்றோரிடம் சொல்லாமல் தமிழகத்திற்கு வந்துள்ளனர். தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் தஞ்சமடைந்த இவர்கள் வடமாநில தொழிலாளர்களை பார்த்து அவர்களுடன் சேர்ந்து தாங்களும் ஏதேனும் தொழில் செய்யலாம் என திட்டத்துடன் இருந்துள்ளனர். இந்நிலையில் நாகலாந்தில் … Read more

“பித்தலாட்டமா பன்ற, தொலைச்சிருவேன் ஜாக்கிரதை” – இன்ஸ்பெக்டரை வெளுத்து வாங்கிய காஞ்சிபுர கலெக்டர் !

காஞ்சிபுரம் அத்திவரதர் ஆலைய தரிசனத்தில் பாஸ் இல்லாமல் பக்தர்களை அனுப்பியதாக அங்கு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் ஒருவரை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கோபத்துடன் திட்டும் வீடியோ ஓன்று வைரலாகி வருகிறது. அத்திவரத்தரை நாள்தோறும் தரிசிக்க தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்கள் உட்பட லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தரிசிக்க வரும்  பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சுமார் 2,000 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்கள் தரிசிக்க வசதியாக பாஸ் மூலம் சிறப்பு … Read more

நெரிசல் இல்லாமல் அத்திவரதரை தரிசிக்க மாலை நேரம் வாருங்கள் – மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் தரிசிக்க மாலை நேரம் வாருங்கள் என்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த 5ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அத்திவரதரை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வெளியூர் மாற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கோவிலுக்கு வருகின்றனர். விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கையானது மேலும் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த வாரம் அதிகமான … Read more

அத்திவரதரை தரிசிக்க எந்த ஏற்பாடும் செய்யவில்லை – பொன்.ராதா குற்றச்சாட்டு!

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த ஒரு ஏற்படும் சரிவர செய்யப்படவில்லை என்று முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்னன் அவர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று பேசியுள்ள நிகழ்வில் தமிழக முதல்வர் உடனடியாக அமைச்சர்களை காஞ்சிபுரத்திற்கு அனுப்பி பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். சாதாரண திருவிழா காலங்களில் செய்யும் ஏற்பாடுகள் இல்லை என்றும் மாவட்ட நிர்வாகம் கர்ப்பிணி மற்றும் முதியவர்களை கோவிலுக்கு வரவேண்டாம் என்று … Read more

அத்திவரதரை தரிசிக்க சென்று உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் – முதல்வர் அறிவிப்பு!

காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்று கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பேர் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் வழங்கப்படும்  என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவ நிகழ்வில் சாமியை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கானோர் வருகின்றனர். இன்றைய தினம் மட்டும் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்துள்ளனர். அளவுக்கு அதிகமா கூட்ட நெரிசலில் சிக்கி இன்று மட்டும் 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என மொத்தம்  4 பேர் உயிரிழந்துள்ளனர். … Read more

BREAKING : “அத்திவரதரை” தரிசிக்க சென்று பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க சென்ற பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். 40 வருடங்களுக்கு பின் தோன்றி இருக்கும் காஞ்சிபுரம் பெருமாள் கோவிலில் அத்திவரதரை தரிசனம் செய்ய நாள்தோறும் லட்சக்கணக்கானோர் வருகின்றனர். கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 4 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். இன்றைய தினம் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. சுமார் 3 லட்சத்திற்கும் அதிகானோர் சாமியை தரிசிக்க வந்ததால் கூட்ட நெரிசல் அதிகமாகியுள்ளது. இந்நிலையில்,ஏற்கனவே 2 … Read more

2021 ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஆயத்தப்பணிகள் தொடக்கம்!

நாட்டில் 16 வது மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஆயத்தப்பணிகள் துவங்க முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றனர். இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாணமை துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்திய நாட்டில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். கடைசியாக கடந்த 2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. இந்நிலையில், 10 வருடங்கள் கழித்து வரும் 2021 ம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இது தொடர்பாக நடந்த கூட்டத்தில் முன்னதாக மாதிரி … Read more

பிரபல ரவுடிக்கு அத்திவரதரை தரிசிக்க வி.வி.ஐ.பி பாஸ்! காவல்துறையிடம் தீவிர விசாரணை!

மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடியான வரிச்சூர் செல்வத்துக்கு காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க வி.வி.ஐ.பி தரிசனம் வழங்கியது யார் என்று காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை காஞ்சிபுரம் பெருமாள் கோவிலில் அத்திவரதர் தோன்றுகிறார். இந்த ஆண்டு கடந்த 4 ம் தேதி  தோன்றிய அத்திவரதரை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கானோர் தரிசித்து வருகின்றனர். பொதுமக்கள் அனைவரும் சாதாரணமாக வரிசையில் நின்று தரிசனம் செய்யும் நிலையில் உயர் அதிகாரிகள், அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் உட்பட … Read more

காஞ்சிபுரத்தில் தொடர் மழை…விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி..!!

காஞ்சிபுரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.காஞ்சிபுரத்தின் திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், கேளம்பாக்கம் போன்ற பகுதிகளில் நேற்று மாலை முதல் கனமழையும், செங்கல்பட்டு, உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம், கூடுவாஞ்சேரி போன்ற பகுதிகளில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. ஆயினும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் … Read more

“போதைக்கு அடிமையான மனைவி” அரை நிர்வாண உடையுடன் விட்டு சென்ற கணவர்..!!

காஞ்சிபுரத்தில் அனாதையாக கைவிடப்பட்ட அமெரிக்க பெண்மணியை அரை நிர்வாண கோலத்தில் காவல்துறையினர் மீட்டனர். அமெரிக்காவைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க கேலா மரீன் நெல்சன் என்ற பெண்மணிக்கும் சென்னை வேளச்சேரி பகுதியில் இருக்கக்கூடிய மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த விமல் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருவரும் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு நிறுவனத்திலிருந்து விமல் வேலை இழந்துள்ளார். அவருடைய மனைவியான கேலா மரீன் நெல்சன் … Read more