மதுரையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி எனும் இடத்தில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு நாகரீகம் தோன்றியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 2500 ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு கால்நடைகளை கொண்டு விவசாயம் செய்யப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டுகளும் இங்கு நடைபெற்றுள்ளது. அதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்வாறு தொல்லியல் துறை ஆராய்ச்சிகளின் முடிவு வெளியாகியுள்ளது. இந்த கீழடி ஆராய்ச்சியானது 2011 […]
கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற அனுமதிக்க கோரி தமிழிசை மனு தாக்கல் செய்துள்ளார். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை தோல்வி அடைந்தார் .ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற்றார். தூத்துக்குடியில் கனிமொழி வெற்றிபெற்றதை அவரை எதிர்த்துபோட்டியிட்ட முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அவரது மனுவில் , தேர்தல் பிரசாரத்தின் போது. ஆரத்திக்கு பணப்பட்டுவாடா செய்த ஆதாரங்கள் இருக்கின்றது என்று […]
காஷ்மீர் தலைவர்களின் குடும்பத்தினரை வீட்டு சிறையில் வைத்திருப்பது கண்டனத்திற்குரியது என்று திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார். திமுக எம்.பி.கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய அரசு இனியாவது முயற்சி செய்ய வேண்டும்.இந்த விவகாரத்தில் ஸ்டாலின் விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை. மேலும் காஷ்மீர் தலைவர்களின் குடும்பத்தினரை வீட்டு சிறையில் வைத்திருப்பது கண்டனத்திற்குரியது.காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு தேவையான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்தார்.
முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேறும் போது அதிமுக அரசு மசோதாக்கு எதிராக வாக்களிக்காமல் அவையில் இருந்து வெளிநடப்பு செய்ததால் தான் மசோதா நிறைவேறியுள்ளது என்று மக்களவை உறுப்பினர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். மக்களவையில் கடந்த 25 ம் தேதி முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்ட சூழலில், இன்று மாநிலங்களவையில் அந்த மசோதாவை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். மக்களவையில் ஆதரவு தெரிவித்த அதிமுக இன்று மாநிலங்களவையில் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறியது. இதே போல, […]
நெல்லை ரெட்டியார்பட்டியில் திமுக முன்னாள் மேயராக இருந்த உமா மகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் பணிப்பெண் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.இந்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் படத்திற்கு திமுக எம்பி கனிமொழி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதன் பின்னர் திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலைக்கான பின்புலம் இன்னும் தெரியாமல் […]
மக்களவையில் திமுக எம்.பி.கனிமொழி பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், இஸ்லாமிய பெண்களின் உரிமையை பற்றி மட்டுமே அரசு கவலைப்படுவது ஏன் ?என்றும் நாட்டில் உள்ள இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்களின் உரிமை குறித்து ஏன் அரசு அக்கறை கொள்ளவில்லை? என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் குறிப்பிட்ட சமுதாயம் மற்றும் மதத்தை குறி வைத்து கொண்டு வரப்பட்டுள்ள இந்த முத்தலாக் தடை சட்டத்தை திமுக எதிர்க்கிறது. கணவன் மனைவிக்கிடையே நடக்கும் இந்த சிவில் விவகாரத்தை கிரிமினல் குற்றமாக எப்படி […]
சென்னையில் திமுக எம் .பி.கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழ் வளர்ச்சிக்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.மேலும் எட்டுவழிச்சாலை, ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. திட்டங்களை செயல்படுத்த என்ன பெயர் மாற்றினாலும், மக்களுடைய விளைநிலங்களை பறிக்க கூடிய எதையும் திமுக ஏற்று கொள்ளாது என்று தெரிவித்தார்.
திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், சமூகநீதி மூலம் கிடைத்த கல்வி உரிமையை புதிய கல்வி கொள்கை பறிக்க முயல்கிறது, இந்த கல்வி கொள்கையை திமுக எதிர்க்கும். ஆயிரமாயிரம் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் கல்வி கொள்கைக்கு எதிராக தமிழகத்தில் உள்ளவர்கள் போராடுவோம். எந்தெந்த வழிகளில் இந்தியை திணிக்க முடியுமோ அதை செய்து வருகிறார்கள் .நாம் ஒவ்வொரு நிமிடமும் எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று பேசினார்.
அஞ்சல் துறையில் வரும் சில காலிப்பணியிடங்களுக்கு முதல் நிலை தேர்வு முதலில் அந்தந்த மாநிலங்களில் பிராந்திய மொழிகளில் நடைபெற்றது. தற்போது முதல்நிலை தேர்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே இருக்கும் என் அறிவிப்பு வெளியானது. இதனை பலரும் எதிர்த்து கருத்து கூறி வருகின்றனர். தூத்துக்குடி தொகுதி எம்பி கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ எதை உண்பது என்பதை தீர்மானிப்பது உண்பவர் மட்டுமே. மற்றவர்கள் அல்ல.’ என பதிவிட்டு இருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பாஜக தேசிய […]
கனிமொழி முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளார், அவர் முறைகேடு செய்ததற்கு என்னிடம் வலுவான ஆதாரம் இருப்பதால் தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பதாக பாஜக மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழியின் வெற்றி செல்லாதது என்று அறிவிக்க கோரி அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் வேட்பாளர் படிவத்தில் உண்மையான தகவல்களை கூறாமல் பொய்யான […]
தூத்துக்குடியில் கனிமொழி வெற்றிபெற்றதை எதிர்த்து பாஜகவின் தமிழிசை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை தோல்வி அடைந்தார் .ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற்றார். இந்த நிலையில் தூத்துக்குடியில் கனிமொழி வெற்றிபெற்றதை அவரை எதிர்த்துபோட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.அவரது மனுவில் , தேர்தல் பிரசாரத்தின் போது. ஆரத்திக்கு பணப்பட்டுவாடா செய்த ஆதாரங்கள் இருக்கின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் […]
தமிழக அரசின் பேருந்துகளில் இந்தி மொழியை எழுதி அதன் மூலம் இந்தி மொழி திணிக்க முயற்சிக்கும் ஆளும் அதிமுக அரசுக்கு திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டிவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பதிவு ஒன்று இட்டுள்ளார். அதில், தமிழக மக்களின் வரிப்பணத்தில் வாங்கப்பட்டுள்ள புதிய பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தமிழகத்தில் மத்திய அரசின் இந்தி திணிப்பு ஒரு புறம் இருக்க, நாங்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் […]
மத்திய பட்ஜெட்டில் எந்த தெளிவான அறிவிப்புகளும் இல்லை என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், திமுக தலைவர் ஸ்டாலின் வகித்த இளைஞரணி செயலாளர் பதவி தான். தந்தையைப் போல சிறப்பாக பணியாற்ற உதயநிதிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். மத்திய பட்ஜெட்டில் எந்த தெளிவான அறிவிப்புகளும் இல்லை. சாமானிய மக்களுக்கு எந்த அறிவிப்புகளும் கிடையாது. நிறைவேற்றியிருப்பதாக மத்திய அரசு சொல்லக்கூடிய பல சாதனைகள் தேடக்கூடிய அளவிற்கு தான் இருக்கின்றது. தூய்மை இந்தியா […]
நேற்று 17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நடைபெற்றது.நேற்று எம்.பி.கள் பதவி ஏற்ற நிலையில் இன்றும் எம்.பி.கள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.இந்த பதவியேற்பு விழாவில் தமிழகத்தை சேர்ந்த அனைத்து எம்.பி.க்கள் தமிழிலே பதவி ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கனிமொழி தூத்தூக்குடி தொகுதியில் போட்டியிட்டார்.இவரை எதிர்த்து தூத்தூக்குடி தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தராஜன் தோல்வியை தழுவினார். நாடாளுமன்ற தேர்தலில் கனிமொழி வெற்றிபெற்றதன் மூலம் தூத்தூக்குடி தொகுதிக்கு எம்.பி.யாக கனிமொழி தேர்வு செய்யப்பட்டார்.இன்று டெல்லியில் […]
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார். இன்று திமுக எம்.பி.கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை அரசு செய்யவில்லை. மக்களை பாதுகாக்கவும், பெண்களை பாதுகாக்கவும் மத்திய மாநில அரசுகள் எந்தவித அக்கறையும் செலுத்தவில்லை என்று திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தும் முதல்வர் தான் தமிழகத்தில் உள்ளார் என்று கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் கனிமொழி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், கூடங்குளம் அணுக்கழிவு மையம் போன்ற மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத திட்டங்களை அரசு செயல்படுத்தக்கூடாது.அணுக்கழிவு மையம் அமைக்கும் முயற்சியில் மக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்துவது சரியல்ல. மின்வாரியம் மட்டுமல்ல,அனைத்து அரசு பணிகளிலும் தமிழர்களுக்கு நியாயமான வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை .மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தும் முதல்வர் தான் தமிழகத்தில் உள்ளார்.அதிமுகவில் உள்ள […]
திமுக சார்பில் பள்ளி நடத்தப்பட்டால் நிச்சயமாக இருமொழிக்கொள்கை ஆகத்தான் இருக்கும் என்று திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக எம்.பி.கனிமொழி கூறுகையில், நீட் தேர்வு குறித்து நாடாளுமன்றத்தில் திமுக நிச்சயமாக குரல் எழுப்பும். தமிழகத்தில் விரைவில் திமுக ஆட்சிக்கு வரும், அப்பொழுது தண்ணீர் பிரச்சனை முற்றிலுமாக தீர்க்கப்படும். தனியார் பள்ளிகளில் மும்மொழி நடத்தப்படுவதற்கு திமுக பொறுப்பல்ல. திமுக சார்பில் பள்ளி நடத்தப்பட்டால் நிச்சயமாக இருமொழிக்கொள்கை ஆகத்தான் இருக்கும். அதிமுகவில் ஒற்றைத்தலைமை வேண்டும் என அக்கட்சி எம்.எல்.ஏக்கள் கூறி […]
மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் புதிய கல்வி வரைவு கொள்கையை வெளியிட்டது.இந்த புதிய கல்வி வரைவு கொள்கை 484 பக்கங்கள் கொண்டுள்ளது. இந்நிலையில் புதிய கல்விக்கொள்கை வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் திமுக எம்.பி.கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், இந்தி உள்பட எந்த மொழியாக இருந்தாலும் திணிக்கப்பட்டால், நாடாளுமன்றத்தில் திமுக எதிர்க்கும் என்று கனிமொழி கூறினார்.
2ஜி வழக்கில் ஆர்.ராசா, கனிமொழி உட்பட அனைவரையும் விடுவித்து டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட கனிமொழி மற்றும் ஆ.ராசா மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளனர். இந்நிலையில் 2ஜி வழக்கை விரைவாக விசாரிக்க கோரி சிபிஐ டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், 2ஜி அலைக்கற்றை வழக்கில் திமுக எம்பிக்கள் ஆ.ராசா, கனிமொழிக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெற்றது.இந்த தேர்தலில் பாஜக 303 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. இந்நிலையில் மக்களவை தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து பாஜக தேசியதலைவர் அமித்ஷா,மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்,திமுகவின் கனிமொழி ஆகியோர் தங்கள் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.