நாகை மாவட்டத்தில் உள்ள நாகூர் தர்கா கந்தூரி விழா வெகுவிமர்சனமாக நடைபெறுவது வழக்கம்.இது முஸ்லிம் மக்களின் விழா எனினும் ஜாதியம் கடந்து ,மதம் கடந்து அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் விழாவாக இந்த விழா இருந்து வருகிறது. அகவே இவ்விழாவை முன்னிட்டு, நாகைப்பட்டினம் மாவட்டத்திற்கு இன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் அறிவிப்பு செய்துள்ளார்.