பழனி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு துணை முதல்வர் சுவாமி தரிசனம் செய்தார். கடந்த 15-ஆம் தேதி துவங்கிய முருகன் ஆலய கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு இன்று மாலை திருச்செந்தூர் முருகன் கோவிலில் சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது. இதற்கிடையில், பழனி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா ஐந்தாம் நாளான நேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.