கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரியார் சிலையை அகற்றுவது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சண்டை பயிற்சி கலைஞரும், இந்து முன்னணி நிர்வாகியுமான கனல் கண்ணன் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து,பெரியார் சிலை குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கில் சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு இன்று நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம். 4 வார காலத்திற்கு விசாரணை அதிகாரி முன்பு […]